கலைமாமணி பத்ம ஸ்ரீ டாக்டர் T.M. சௌந்தரராஜன் அவர்கள்
பா4ஷா ப4க்திமிக்கவர். அகில இந்திய வானொலியில் கச்சேரியின் போது
நம் ஸெளராஷ்ட்ர மஹான்களின் பாடல் ஒன்றை பாடுவது வழக்கம்
வருடத்தில் நான்கு கச்சேரிகளாவது செய்வார். அக்கச்சேரியின் போது மகன்
கணேஷமூர்த்தி குடுவாவினால் ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்ட
பாடல்களுடன்,T.M.S அவர்களின் சிஷ்யர் பேராசிரியர் G.R.மகாதேவன்
மற்றும்T.M.S. ரசிகர் நற்பணி மன்ற செயலாளர் M.P. பாலன்
ஆகியோர்களிடமிருந்து பெற்ற AIR ஒலி நாடா பாடல்கள் இந்த சி.டி யில் பதிவு
செய்யப் பட்டுள்ளது.பாடல்கள் பாடிய பத்ம ஸ்ரீ T.M.சௌந்தரராஜன் அவர்களுக்கும்
மற்றும் ஒலி நாடாக்களை கொடுத்துதவிய பேராசிரியர் G.R.மகாதேவன்,M.P.பாலன் ஆகியோர்களுக்கும்
அன்புடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.