|
|
|
|
டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்கள் மதுரையம்பதியில் சௌராஷ்ட்ர சமூகத்தில்
புரோகிதத்தை தொழிலாகக் கொண்ட தொகுளுவா மீனாட்சி அய்யங்காருக்கு 1923
மார்ச் மாதம் 24-ம் நாள் பிறந்தார். இறைவன் அருளால் இயற்கையிலேயே நல்ல குரல்
வளம் பெற்றிருக்கிறார். பள்ளியில் படிக்கின்ற காலத்தில் இறை வணக்கத்தின் போது
கடவுள் வாழ்த்துப் பாடல் இவர் பாடுவது வழக்கம். இவரது தகப்பனார்
புரோகிதத்நம் தொழிலுடன் கோயிலில் அர்ச்சகராக இருந்ததினால் கோயிலில்
நடைபெறும் பஜனைகளில் கலந்து கொண்டு பாடி வந்தார். அன்றைய திரையுலக
நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடும் பாட்டுக்கள் இவரை கவர்ந்தது. அவரைப்
போலவே பாட பழகிக் கொண்டு அவரது எதிரொலிப் பாடகராக திகழ்ந்தார். பிறகு
பூச்சி ஸ்ரீநிவாசய்யங்காரின் மருமகனான காரைக்குடி ராஜாமணி அய்யங்காரிடம் முறையாக இசை
பயின்று தன் இசைத் திறமைக்கு நல்ல அஸ்திவாரம் அமைத்துக் கொண்டார்.
திரையுலக பின்னணிப் பாடகராக அறிமுகமாகி தமது இசைத் திறமையால் முன்னேறி அரை
நூற்றாண்டுக்கு மேல் பின்னணிப் பாடகராக விளங்கி பேரும் புகழும் பெற்றிருக்கிறார்.
உணர்ச்சிகளை வெளியிட்டு இனிமையும் கம்பீரமும் நிறைந்த குரலில் வார்த்தைகளைப் பிசிர்
இல்லாமல் தௌ¤வான உச்சரிப்புடன் பாடி வந்ததால் ஒரு சூரியன், ஒரு நிலா, அது போல் ஒருT.M.S
என்றும் ஒரு சிலரின் பாட்டில் தான் தமிழ் சிறப்புப் பெருகிறது அப்படிப் பட்டவர்களில்
முக்கியமானவர் T.M.S என்றும் 'மெல்லிசை மன்னர்' M.S.விஸ்வநாதன் அவர்களால் பாராட்டப்
பட்டுள்ளார். திரையுலகில் பாடுவதோடு இறைவன் மீது பல பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்
அப்பாடல்கள் திருக் கோயில்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன அமெரிக்கா,சிங்கப்பூர்,
மலேசியா போன்ற அயல் நாடுகளுக்கும் சென்று பாடியுள்ளார்.இவரது பாடல்கள் உலகத்தில்
தமிழர்கள் வாழும் மூலை முடுக்கைகளில் ஒலிக்காத நாட்களே கிடையாது என்று கூறும் அளவிற்கு
வானொலிகளில் ஒலிக்கின்றன. இவரது குல தெய்வம் திருமாலாக இருந்தாலும் இவர் ஓர் முருக
பக்தர் தமது தாய்ப் பாஷை மீது ம், நாயகி சுவாமிகளின் மீதும் மிக்க பக்தியுடையவர்.
வானொலியில் கசேரியின் போது நாயகி சுவாமியின் சௌராஷ்ட்ர பாடல் ஒன்றும், நம் சமூக
மஹான்களின் பாடல்கள்பாடுவது வழக்கமாகக் கொண்டுள்ளார். மாநில , மத்திய அரசுகள் முறையே
கலைமாமணி, பத்மஸ்ரீ என்ற பட்டத்தைக் கொடுத்து கௌரவித்துள்ளது இவருக்கு மதுரைப்
பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் கொடுத்து சிறப்பித்துள்ளது. இவர் இயல் இசை நாடக மன்றத்தின்
தலைவராகவும் இருந்துள்ளார் இவரால் நம் சமூகம் பெருமை யடைகிறது ஸ்ரீT.M.S அவர்களுக்கு
அன்புடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கே.எஸ். கிருஷ்ணமூர்த்தி & தங்கமணி கிருஷ்ணமூர்த்தி)
|
|
|