|
|
|
|
'கான கல்பதரு; 'கான கலா சிரோன்மணி' ஸ்ரீ T. K . ராமரத்தினம்
திருநெல்வேலி மாவட்டம் காருக்குறிச்சி அருகில் உள்ள புதுக்குடி என்னும்
கிராமத்தில் தஸ்மா ஸ்ரீ கோவிந்தராயலு அய்யர்--லெட்சுமி தம்பதியினருக்கு
3--6--1926.ல் திருக்குமாரனாய் பிறந்தார். தனது 12 வயதிலேயே சங்கீதம் பாடும் திறமை
பெற்று இருந்தார். பின் மதுரை வந்து திரு T.A. நாகசுவாமி பாகவதரிடம் 15
வருடங்கள் குருகுல சிஷ்யரானார். . அதனால் இளம்வயதிலேயே தம் குருவுடன்
தம்பூரா வாசித்து உடன் பாடி வரலானார். சேலத்தில் தம் குரு பாடிக்கொண்டே
இருக்கும்பொழுது வாயு கோளாறினால் பாட முடியாமல் போனது. கச்சேரியை
ராமரத்தினத்தை தொடர்ந்து பாடுமாறு குரு பணிக்க கேதார கௌள ராகம் பாடி
ஸ்வரஜதியும் பாடிமுடிந்தபின் குருவின் வாயு வலி போன இடம் தெரியவில்லை. தொடர்ந்து தமது
குருவுடன் 2 மணி நேரம் பாடியதை பாக்கியமாக கருதுகிறார். இந்தியாவில் உள்ள பல ஊர்களிலும்,
சபாக்களிலும் பாடி புகழ் பெற்றுள்ளார். நிருச்சி அகில இந்திய வானொலியிலும் இருபத்தைந்து
வருடங்களாக பாடியுள்ளார். ஸ்ரீT.A. நாகசுவாமி பாகவத சேவா சமாஜம் அமைத்து குரு பூஜையினை
சிறப்பாக நடத்தி வருகிறார்.மேடைக் கச்சேரிகள் மற்றும் வானொலி வாயிலாகவும் சுவாமிகளுடைய
கீர்த்தனைகளைப் பாடிப் பரப்புகின்றார். கன தனவான்களின் உதவியுடன் மூன்று ஒலி நாடாக்களை
தாமே பாடி வெளியிட்டுள்ளார். பாகவதர் அவர்களுக்கு நன்றியை அன்புடன் தெரிவித்துக்
கொள்கிறோம்
கே.எஸ். கிருஷ்ணமூர்த்தி&தங்கமணி கிருஷ்ணமூர்த்தி
|
|
|