மங்களம்பாடுவம் வாரீர்

   

துஜாவந்தி இராகம்
ஆதி தாளம்

பல்லவி

மங்களம்பாடுவம் வாரீர் மங்கைமார்பர்க்கு
மங்களம்பாடுவம் வாரீர்   [ம]

அநுபல்லவி

மங்களம்பாடுவம் வாரீர் எங்கள் ப்ராணநாதனுக்கு
சங்கரனாதியோர் போற்றும் செங்கமலபாதனுக்கு  [ம]

சரணங்கள்

இருமூன்றொருநாளுங் கிரியை
யெடுத்திந்திரன் மழையைத் தடுத்துக்
கரியைக்காத்திடுங்கருணை அரிஇவன் தானென்ன
பெரியவகிலமதில் பேர்பெற்ற கண்ணனுக்கு   [ம]

அயனை ஈன்றவனிவனே அகிலமுமுண்டாக்க அழிக்க இவனே
அயனமாய் நின்ற எங்கள் நயனன் கோபாலகிருஷ்ணன்
நயன அழகைநம் நயனத்தாற் சேவித்து  [ம]

இதுநற்றருணங்கேளீ ருய்ந்திடநமக் கிது *நற்றருணங்*
இதுநற்றருணங்கேளீர் கதிவேறில்லை இல்லை
துதிசெய்பவர்க்கு நித்ய பதியளிப்பவனுக்கு   [ம]

பண்டைநான் மறைகள்பாடும் அண்டர்கோமானைக்
கொண்டாட எண்ணங்கைகூடும் *அண்டர்கோமா*
தொண்டுபுரிந்திடுமவர்க் குண்டாயசன்மவினையைக்
கண்டித்து நித்தியானந்தம் உண்டாகச்செய்பவனுக்கு  [ம]

நந்தகோபாலன் சேவையே வைகுந்தவாழ்வு *நந்தகோபால
அந்தமாய ஆயர்பாடி வந்துபந்த ஜன்மவினைத்
தொந்தமறுத் தெங்களுக்கு நந்தாவின்பந்தந்தவற்கு  [ம]

கடைத்தேற்ற வந்தவன்இவன் கருணையினால் *கடைத்தேற்ற*
அடையவேண்டியபலன் கிடைத்ததிங்கே நம்கையில்
வடபத்ரசாயி போற்றும் நடனகோபாலனுக்கு   [ம]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube