கு3ரு ஸ்துதி

   

(ஆக்கியவர்: ப2ண்ட ப4வ்துல்னு என்ற ஸ்ரீ பாலு. சாரங்கபாணி பாகவதர்) Balu SarangaPani Bhagavadar

ஸ்ரீமத் ப்3ரம்ஹ குலாப்தி4 சந்த்3ர மமலம்

ஜாபா3லி கோ3த்ரோத் ப4வம்

ஸ்ரீரங்கா3ர்ய ஸுதம் பு3தா4தி3 வினுதம்

4க்த்யாதி3 யோகா3ன் விதம்

ஸ்ரீ ஸெளராஷ்ட்ர ஹுபா4ஷயா கவிக்ருதம்

வேதா3ந்த ஸீல ப்ரத3ம்

ஸ்ரீ ராமாப்ஜ பதா3ஸ்ருதம்

ஸ்ரீ நடன கோ3பாலம் ப4ஜேஹம் ஸதா.

பொருள்

மேன்மை பொருந்திய பிராம்மண குலமாகிய சமுத்திரத்திற்குச் சந்திரனாகவும், நிர்மலமானவராகவும்,ஜாபாலி கோத்திரத்தில் அவதரித்தவராகவும்,ஸ்ரீரங்கார்யருடைய திருக் குமாரராகவும், பண்டிதர், பாமரர்,உள்பட அனைவராலும் வணங்கப் பட்டவராகவும், பக்தி முதலிய யோகங்களோடு கூடியவராகவும், அழகு மிக்க ஸெளராஷ்ட்ர மொழியில் பக்திப் பாக்களை அருளியவராகவும், வேதாந்த நன்னெறியென்னும் அமிர்தத்தை அளிப்பவராகவும் ஸ்ரீ ராமனுடைய சரண கமலங்களை ஆஸ்ரயித்தவராகவும் விளங்குகின்ற ஸ்ரீ நடன கோபால நாயகி சுவாமிகளை நான் எப்போதும் பஜிக்கின்றேன்.


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube