ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள்
தமிழ் அஷ்டோத்திரம்

     

( ஸ்ரீமதி சிவானந்த விஜயலக்ஷிமி அஷ்டோத்திரம் ஆக்கியவர் )

Srimathi Sivanandha VijayaLakshmiசிவானந்த விஜயலெட்சுமி அம்மையார் மதுரையைச் சார்ந்தவர். நாயகி சுவாமிகளிடத்து மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சௌராஷ்ட்ர சமூகத்தைச் சாராதவராயிருப்பினும் சுவாமிகளுடைய பாடல்களை ஆர்வத்துடன் கற்று எல்லோருக்கும் புரியும் படியாக எளிமையாக எடுத்துரைத்து அனைவரின் ஆர்வத்தைத் தூண்டியவர். சுவாமிகள் பாடல்கள் மீது எல்லோருக்கும் நாட்டம் ஏற்படச் செய்தவர் முதன் முதலில் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக் கோயிலில் சுவாமிகளைப் பற்றி பக்திபரவம் ஊட்டும் சொற்பொழிவுகளைச்செய்து சுவாமிகளை, அவர்தம் கருத்துக்களை அனைத்துத் தரப்பினரும் அறிந்து பாராட்டும்படி செய்தவர். மேலும் சுவாமிகளைப் பற்றி ''மதுரையின் ஜோதி'',''கண்ணனைக் கலந்த காதலர்'' ஆகிய நூல்களையும் எழுதியவர்.

ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளின் ஞாபகம் என்றென்றும் நிலைத்து நிற்கவும் அன்னாருடையநாமாமிர்தத்தை நாடெங்கும் பரப்பவும் மதுரையில் சுவாமிகளின் பெயரால் ஓர் அழகிய கலைக்கோயில் நிறுவவேண்டுமென்ற எண்ணத்தை முதன் முதல் தோற்றுவித்த பெருமை 'அபிநவ மீரா', 'கீதா வாசஸ்பதி', 'சொல்லின் செல்வி' 'சிவானந்த பிரதித்வனி' ஸ்ரீமதி சிவானந்த விஜயலக்ஷிமி அவர்களையேச் சாரும்.

அஷ்டோத்திரம்

அருள் ஒளிப் பிழம்பே போற்றி போற்றி
ஆலவாயின் சுடரே போற்றி
இன்பம் பொங்கும் கடலே போற்றி
ஈடில்லா நல்தவத்தோய் போற்றி
உத்தம ஸத்குணத் துயர்ந்தவ போற்றி

ஊன்றிய யோகம் பெற்றாய் போற்றி
எல்லாம் துறந்த இறைவா போற்றி
ஏகனைக் கலந்த நாயகி போற்றி
ஐயனைக் கூடிய அணங்கே போற்றி
ஒப்பில் பக்தியின் உருவே போற்றி

ஓதா துணர்ந்த யோகி போற்றி
ஒளவியம் அற்ற அண்ணலே போற்றி
அஃதினை உணர்ந்த அறிவோய் போற்றி
கந்தனின் இன்னுருவங் கண்டவ போற்றி
காரண காரியம் கடந்தவ போற்றி

கிருஷ்ணப் பிரேமை வடிவே போற்றி
கீதையின் உருவாம் தேவே போற்றி
குன்றா றேறிய குணத்தோய் போற்றி
கூவி மக்களைக் காப்போய் போற்றி
கெடாத செல்வம் அளித்தோய் போற்றி

கேட்ட வரங்கள் கொடுப்போய் போற்றி
கைதவம் அணுகாக் கதியே போற்றி
கொப்பான் குலத்தின் கொழுந்தே போற்றி
கோபம் ஒழித்த குணத்தோய் போற்றி
ஞானிகள் போற்றும் நாயகி போற்றி

சத்தினைக் காட்டும் ஸத்குரு போற்றி
சாகா மெய்ந் நிலை சார்ந்தோய் போற்றி
சித்தர் போற்றும் சித்தா போற்றி
சீரிய நெறியினைத் தந்தோய் போற்றி
சுத்த பக்த மெய் ஞானி போற்றி

சூதில் வெளியினைக் கண்டோய் போற்றி
செய் பயன் துறக்கும் தியாகி போற்றி
சேமம் தந்திடும் செய்யோய் போற்றி
சொற் பொருள் கடந்த நிலையோய் போற்றி
சோதிப் பிழம்பே திருவடி போற்றி

சௌராஷ்ட்ர குலத் திருவிளக்கே போற்றி
சௌராஷ்ட்ர கீத தாயக போற்றி
சதாநந்தத் திரு நாமா போற்றி
தத்துவம் சொல்லும் தற்பர போற்றி போற்றி
தாபம் கடந்த நேமா போற்றி போற்றி

திருமாற் கடிமை செய்தோய் போற்றி
தீவிர சாதனம் புரிந்தோய் போற்றி
துன்பம் அகற்றும் துணைவா போற்றி
தூய ஞான ஸத்குருவே போற்றி
தெள்ள முதனைய சொல் உடையாய் போற்றி

தேனினும் இனிய கீதா போற்றி
தையலார் வடிவு புனைந்தவ போற்றி
தொண்டர் குலத்தினுக் கரசே போற்றி
தோற்றமும் மறைவும் அற்றோய் போற்றி

நாகலிங்கர் தரு யோகி போற்றி
நித்திய சத்திய வடிவே போற்றி
நீச மனத்தினை வென்றோய் போற்றி
நுண்ணிய பொருள் உரை நாவோய் போற்றி
நூல் தரு அறிவினைத் தந்தோய் போற்றி

நெடு நாள் மோனம் பூண்டோய் போற்றி
நேமி கரத்தான் அடியாய் போற்றி
நையும் நாயகி மனத்தோய் போற்றி
நொந்தே கண்ணனை கடிந்தோய் போற்றி
நோய்தீர் மருந்தினை நுவன்றவ போற்றி

பக்தியிற் சிறந்த பரமா போற்றி
பாவால் பரவிப் பணிந்தோய் போற்றி
பித்தாய் பரமனைப் பிடித்தோய் போற்றி
பீதாம் பரதரன் நாயகி போற்றி
புண்ணியர் பயனாய் வந்தோய் போற்றி

பூதலம் போற்றும் புனிதா போற்றி
பெண்ணாய்க் கண்ணனை மணந்தாய் போற்றி
பேசற்கரிய பெரியோய் போற்றி
பைங் கொடி ஆண்டாள் போன்றவ போற்றி
பொற்றாள் தனை எமக்கருள்வாய் போற்றி

போத ஸத் குரு நாதா போற்றி
பௌவப் பெரும் பவம் கடந்தோய் போற்றி
மதுரையின் மாசறு ஜோதி போற்றி
மாதவ ராஜ யோகி போற்றி
மின்னெனும் வாழ்வினைத் துறந்தோய் போற்றி

தன்னிகர் இல்லாத் தவத் தோய் போற்றி
முக்தர் போற்றும் முனிவா போற்றி
மூண்டெழும் ஞானக் கனலே போற்றி
மெய்ப் பொருள் காட்டும் மேலோய் போற்றி
மேலோர்க் கெல்லாம் மேலோய் போற்றி

மையலில் கோபியை ஒத்தாய் போற்றி
மைவண்ணம் பதம் கலந் தோய் போற்றி
மொ:ட்டான்,ஒள்ட்யான் ஆனவ போற்றி
மோக்ஷ சுகம் சொலும் முக்தா போற்றி
மௌன சுகம் கண்ட முனிவா போற்றி

மகத்துவம் நிறைந்த மாண்பா போற்றி
யாண்டும் நிலைக்கும் புகழோய் போற்றி
ரங்கார்யர் திரு மகனே போற்றி
இலக்குமியர் தவப்பய னே போற்றி
ராம பத்ர திரு நாமா போற்றி

வந்திப் பவர்க் கருள் தருவே போற்றி
வாரிதியே ! அருள் அமுதே போற்றி
விண்ணவர் போற்றும் கண்ணிய போற்றி
வீரா! அருள் படைத் தீரா போற்றி
வென்றாய் புலன்களை! வேந்தே! போற்றி

வேத சிரத்தினை விண்டவ போற்றி
வையகம் திருத்த வந்தவ போற்றி
வைகுண்ட நாதனைக் கண்டவ போற்றி
சாந்தி நிரம்பிய மனத் தோய் போற்றி
சாந்தம் தவழும் முகத்தோய் போற்றி

பன்னரும் தவமியற்றியவா போற்றி
நன்னெறி உரைத்திடும் நாதா போற்றி
பிரம்மச்சரிய விரதம் பூண்டோய் போற்றி
பிக்ஷை ஏற்றே வாழ்ந்தோய் போற்றி
குருவாரம் தனில் உதித்தோய் போற்றி

குருவாய் எமையிங் காள்வாய் போற்றி
வடபத் ரார்யர் அருள் மைந்தா போற்றி
நடன கோபால நாயகி போற்றி

ஸ்ரீ K.R.கிருஷ்ணமாச்சாரி

     இவர், ஸ்ரீரங்கம் அஹோபில மடத்தின் ஆஸ்தான வித்வான் ஸ்ரீ உ.வே.டாக்டர் S.V.நரசிம்மாசார்ய ஸவாமி, M.A; Ph.D அவர்களின் பேராதரவுடனும்; மதுரை சித்தாச்ரம ஆசார்யர் பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி வழிகாட்டுதல் மூலமாக ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகளின் அஷ்டோத்ர சத நாமாவழிகளை சமஸ்கிருதத்திலும், தமிழிலும் ஸ்ரீ K.R. கிருஷ்ணமாச்சாரி உருவாக்கியுள்ளார். இதனை முதன் முதலில் 1987ல் வெளியிட்டுள்ளார். நாயகி சுவாமிகளின் 150 வது ஜெயந்தி விழாவின் போது (4 - 1 - 1993 ல்) மறு பிரசுரமாக வெளியிட்டுள்ளார்.

மேலும் இவ் அஷ்டோத்ர சத நாமாவளிகளைஸ்ரீமந் நடன கோபால பிருந்தாவன ஆலய பிரகாரத்தில் கல் வெட்டில் செதுக்கி வைத்துள்ளார்.மற்றும் நாயகி சுவாமிகளின் கட்டுரைகளை எழுதி சப்தகிரி, தினமலர் முதலிய பத்திரிகைகளின் மூலம் சுவாமிகளின் புகழ் பரப்பி வருவதுடன், நம் சமூக மகான்களின் கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதி பத்திரிகைகளின் வாயிலாக புகழ் பரப்பி வருகிறார்.

1. ஓம் ஸ்ரீமத் ரங்கார்யாய ஸுதாய நம:
2. ஸ்ரீராமப4த்3ரார்யாய நம:
3. ஸத்கு3ரவே நம:
4. லக்ஷ்மிபா3யி நந்தனாய நம:
5. ராமார்யானுஜாய நம:
6. ஆஸ்திகாய நம:
7. ஆசார்ய வடபத்ரார்ய ப்ரிய சிஷ்யாய நம:
8. கு3ருப்ரியாய நம:
9. கொப்பான் வம்ஸாய நம:
10. ஸதா3நந்தாய நம:
11. ஜாபால்யன்வய ஸம்ப4வாய நம:
12. க்ருஷ்ண பத்ன்யை நம:
13. க்ருஷ்ண தாஸாய நம:
14. ஸாந்த ரூபிணே நம:
15. ஹரி ப்ரியாய நம:
16. ஸருக்மணி ஸமேத க்ருஷ்ண நித்ய ஸ்தவாதராய நம:
17. காளீய நடனகோபால ஸக்தாய நம:
18. தத்த்4யான ஸக்த தி4யே நம:
19. வீணாய கிருஷ்ண ஸந்நாம பாராயண பராயணாய நம:
20. ராமாப்3ஜ பத3 ஸம்ஸக்தாய நம:
21.நாகலிங்காத்4ய சிஷ்ய காய நம:
22. வேங்கட்ரமண வம்சோத்தாய நம:
23. நைஷ்டிக ப்ரஹ்மசாரினே நம:
24. ஸாயிதீ கர்த்ரே நம:
25. ஜகத்கு3ரவே நம:
26. விப்ரச்ரேஷ்டாய நம:
27. ஜன வல்லபா4ய நம:
28. கீ3த கர்த்ரே நம:
29. குல தீ3பகாய நம:
30. விப்ர ஸம்பூஜ்யாய நம:
31. ஸெளராஷ்ட்ர ஸுமஹாகவயே நம:
32. தி3வ்ய ஸுரீந்த்ராய நம:
33. ப்ரப3ந்த4 க்ருதே நம:
34. ஸெளராஷ்ட்ர பா4ஷா சதுராய நம:
35. ப்3ருந்தாவன ஸமாதிமதே நம:
36. நாயகி மந்தி3ரா வாஸிணே நம:
37. ஸ்தித ப்ரக்ஞாய நம:
38. ஸத்ய வாசே நம:
39. ஸ்ரீபா4கவத தா3ஸாய நம:
40. ப4கவத் ப4க்தி சே2வத2யே நம:
41. யோக3நிஷ்டாய நம:
42. ராஜயோகா4ப்யாஸிணே நம:
43. மாத4வ யோகிராஜே நம:
44. ராஜபூஜித யோகிணே நம:
45. ஸதா நாயகீ ரூபவதே நம:
46. ஸதா3நந்த3 ஸுஸித்தா4த்மனே நம:
47. ஸதாசாரோபதே3 சகாய நம:
48. நித்யா நந்தா3ய நம:
49. புண்யசீலாய நம:
50 புண்ய ச்லோகாய நம:
51. பவித்ரே வாசே நம:
52. விசிஷ்டாத்3வைத நிரதாய நம:
53. வைஷ்ணவாசார்ய தல்லஜாய நம:
54.ஸ்ரீராமானுஜ ஸித்தானுஷ்டான பத33ர்சகாய நம:
55. ஸ்வயம் கோபீஸ்வரூபாய நம:
56. நித்ய ஸ்துதிகராய நம:
57. ஸுதியே நம:
58. கோவிந்த தா3ஸ ஸம்பூஜ்யாய நம:
59. விட்டலதாஸ கா3னக்ருதே நம:
60. வேங்கடஸுரீந்த்ர ஸமகாலாய நம:
61. அகளங்க ஹ்ருதே நம:
62. தேஜோரூபினே நம:
63. மஹாதேஜஸே நம:
64. த்3வாத3சோர்த்4வ ஸுபுண்ட்ரகாய நம:
65. மாத்ருபா4ஷோத்கர்ஷ காரிணே நம:
66. கோ3தா3மகுட மூர்த்தகாய நம:
67. துளசிமாலிகா வக்ஷஸே நம:
68. சங்க சக்கராங்கிதாம் ஸவதே நம:
69. ஸ்ரீபா4ஷ்யாப்4யாஸ ஸம்லக்னாய நம:
70. நூபுராங்க்4ரயே நம:
71. ஜகத்தி3 தாய நம:
72. சின்முத்ர ஹஸ்தாய நம:
73. ஸ்ரீகீதாபதா3னுஷ்டான தத்பராய நம:
74. கீதா விஷ்ணுபுராணாதி நித்ய பாராயண வ்ரதாய நம:
75. ஸ்ரீரங்கநாத தாஸாய நம:
76. தக்ஷிண ஸ்ரீசைதன்யாய நம:
77. மாருத்யாத்ம ப3லாய நம:
78. லோகோபகாரினே நம:
79. நித்யஸூரி ராஜே நம:
80. உஞ்சவ்ருத்தி ப்ரியாய நம:
81. ப்ரஹ்ம ஞானினே நம:
82. பங்கேரு ஹானனாய நம:
83. விஷ்ணு கைங்கர்ய நிரதாய நம:
84. மீனாட்சி நகரோஜ்வலாய நம:
85. கோ3தா3ச்ரித ஸ்ரீரங்கேச ஸமராத4ன லோலுபாய நம:
86. குருபக்த சிரோரத்னாய நம:
87. குருபாதாப்ஜ ஸேவகாய நம:
88. அனுஷ்டித த்3விஜாசாராய நம:
89. நடனான்வித கா3னவதே நம:
90. ஹரி ஸந்நாம ப4ஜனபராய நம:
91. மோக்ஷாத்4வ த3ர்சகாய நம:
92. பராங்குசப்ரியா ரூபத3ராய நம:
93. த்3ராவிடப்த3ய க்ருதே நம:
94. வேணுகான ப்ரியாய நம:
95. மார்க3சீர்ஷ ஜன்மனே நம:
96. ஜக3த் ப்ரியாய நம:
97. வைகுண்டைகாத3ஸி தி3னே-- வைகுண்டலோக பா4கே நம:
98. குருவாரோத3ய முக்தாய நம:
99. அஷ்டாக்ஷர ஜபேரதாய நம:
100. நாம ஸங்கீர்த்தன படவே நம:
101. ஆத்ம ஸ்த்3தி4த போ34காய நம:
102. சரமச்லோக சரணாய நம:
103. மாத்ரு பா4ஷா ப்ரபோ34காய நம:
104. ஜ்ஞான தா3த்ரே நம:
105. ப்ருது2 யசஸே நம:
106. சார்ங்கபாணி கவிஸ்துதாய நம:
107. ஸ்ரீராமபத3 பத்மாளயே நம:
108. ஸ்ரீமந் நடனகோபால நாயகீ ஸ்வாமிணே நம:


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube