அரனுமயனும் காணாத

   

கேதாரகௌள இராகம்
ரூபக தாளம்

கண்ணிகள்

அரனுமயனும் காணாத திருவடியை யுடையோன்
கருடன் முதுகேறிவரும் கிருபைமிக் குடையோன்   [அ]

பாலும் தண்ணீர்போலப் பரந்தாமனோடிருக்க அவன்
சீலத்திருவடிகளை யென்சென்னிமேல் தரிக்க   [அ]

சென்னிக்குத் திருவாபரணம் சேவடியினை யலவோ
என்னிலிருந் தானந்தக் கூத்தாடு மிவனலவோ   [அ]

வந்துநொந்துகிடக்கின்ற என்சிந்தைநோ யறுப்பானோ
நந்தகோபன் மருகியென நானும் பொறுப்பேனோ   [அ]

கன்றுகள் பின்போக்கிடாமல் கட்டியணைப்பேனே
என்றுமிதுபோலிருப்போ மென்றெண்ணிப் பிழைப்பேனே   [அ]

ஆதரியாமலிருப்ப தழகலவே தோழி
பாதாரவிந்தமேகதி பரிபூரணன் வாழி   [அ]

ஈசனேடியாரேடி யிப்படிச்செய்யலாமோ
நாசனேடி அரக்கருக்கு நம்மைப்பிரியலாமோ   [அ]

பிரிவதற்கான பிழை நாம் என்செய்தோம் கூறு
எரியுதே சர்வாங்கமு மிங்கென்செய்வோம் தேறு   [அ]

திருவடிப்பொடியைக் கொணர்ந்து தேகமெங்கும் பூசு
வரும்வினையை அறுத்து விடும்மாலடியைப்பேசு  [அ]

பொங்குதவன் மேலாசை போயழைத்துவாடி
எங்குமெல்லா மாய்த்தோன்றும் எம்பெருமானேடி   [அ]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube