அறம்புரியாதார் மனம்போல்

   

நீலாம்பரி ராகம்
திரிபுடை தாளம்

கண்ணிகள்

அறம்புரியாதார் மனம்போல் அழுக்குற்றதே நெஞ்சம்
கறவைகள் பின்னாலேவரும் காளையின் தாள் தஞ்சம்   [அ]

பரிகொடுத்தவர்போலப் பரதவிக்குதே யென்னெஞ்சம்
கரியதிருமேனியன் கமலப்பதம் தஞ்சம்   [அ]

திங்களிலாராவதுபோல் திகழ்கின்றதே நெஞ்சம்
எங்கள் திருவெங்கடேசன் இணையடிகள் தஞ்சம்  [அ]

ஆத்மசம்பந்தமிருக்க அகலநடந்தானே
சாத்வீ கதெய்வமென நான் சரணமடைந்தேனே   [அ]

பற்றுதேடி அடிவயிற்றில் பாலனைப்போய்ப் பாராய்
நற்றுழாய்மாலை மார்பனை நாடியிவைகூறாய்   [அ]

எக்குற்றங்களும்கொண்டருளும் எம்பெருமானே
மக்களைப்பெறாதமலடி மனங்கொண்டானே   [அ]

வெயிலிலகப்பட்ட புழுபோலமெலிந்தேனே
கயல்விழியேபோடியே யென்கருத்துற நொந்தேனே   [அ]

நற்பூசையான் செய்திருந்தால் நண்ணுமோவித்துன்பம்
அற்புதலீலைகள் செய்வானே ஆச்சியரின்பன்   [அ]

கண்பஞ்சம்தீர எப்போதடைகுவானோ கண்ணன்
வீண்கதிர்மதிகண்களாய் விளங்கும் பச்சைவண்ணன்   [அ]

என்னைப்போலப்பாவிகள் ஈரேழ்புவன த்துண்டோ
என்னென்று பொறுப்பேனய்யோ இப்படியுமுண்டோ   [அ]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube