அன்னம் புசியென்றுரையாதே

   

ஜதிஸ்வரம்
ரூபக தாளம்

கண்ணிகள்

அன்னம் புசியென்றுரையாதே அகன்றுபோடி
அன்னம் விஷமாயிருக்கிற தறிந்துகொள்ளாய்நாடி   [அ]

புன்னை மரத்தடியில் பெண்கள் புலம்பச்செய்த சோரன்
என்னை மறந்தானோ இப்போ திக்குலவுபகாரன்  [அ]

ஆள்செய்யாமலே நாளிங்கே அகன்றுபோகுதேடி
வாழ்விப்பானென்றேயிருந்தேன் மாயஞ்செய்தானேடி  [அ]

தாகநீரேனுங்கொள்ளெனச் சாற்றுகிறாயிங்கே
தாகமடங்குமோ தாமோதரனைக்காணாதிங்கே  [அ]

சொல்லாதே அடைக்காயமுதால் சுகமென்னேடி
எல்லாருக்கும் தெரியுமே யென்னிதயகீ தன்றோடி   [அ]

கண்ணேறுபடும்படி யெங்கெங்கே செல்கிறானோ
நண்ணப்போயழைத்துவாடி நான்காணாதுய்வேனோ  [அ]

திடுக்குத்திடுக்கென வென்னெஞ்சம் திகிலடைகுதிங்கே
அடுக்குமுறி வெண்ணெய் கண்ணனுக் கமுதுசெய்வ தெங்கே  [அ]

தயிர்கடையும் வேளைவந்து தழுவி விளையாடும்
மயிலிறகே கொண்டையன் மனமென்று நம்பால் நாடும்  [அ]

மழையில்லாப்பயிர துபோல் நான் மயங்குவேனோடிவாடி
களையெடுக்கா தபயிர்கள் தலையெடுக்குமோடி  [அ]

செழித்திருந்தேனே கண்ணனை சேவிக்கம்போதெல்லாம்
குழைத்துக்கிடக்கின்றன பார் குழக்கன்றுகளெல்லாம்  [அ]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube