அடியார்களை நிந்தித்தபசாரக் கடலில்

   

ஆனந்தபைரவி ராகம்
அட தாளம்

கண்ணிகள்

அடியார்களை நிந்தித்தபசாரக் கடலில் வீழ்ந் தழியாதே
அல்ல லொழியாதே பொல்லாப்பழி யீதே
தொல்லை அவனியில் மீதே அய்யோ நெஞ்சமே
கண்ணன் யா தனாச் சடலமெடுத்து நரகவாசம் பண்ணச் செய்யுமடா   [அ]

இருளார் சடவினைத் துயரமே
யிடமாக் கொடுத்திடுமடா   [அ]

மனிதச்சடல மெடுத்ததற்கு
கிடைத்த திது தானா   [அ]

ஸ்ரீமான் உடையவரிடத்தில்
அடையாளங்கள் பெற்றிடும்   [அ]

பெருங்குடையாய் கோவர்த்தனமதை
பிடித்த கோபால கிருஷ்ணன்   [அ]

அய்யோ மடையர்போல் தடையின்றி
லொட லொடனப் பேசி   [அ]

இப்படி வானளந்தவன் பால்
குடியா யிருக்கு முயர்   [அ]

பாற்கடலைக் கடைந்தவன் றன்
அடிமேலாசை வைத்தாடும்   [அ]

சன்மயிடர் ஒழிந்திட நல்ல தடத்தில்
நடனம் பண்ணும்   [அ]

இப்படி பாரம் தீர்த்த வனடியைப்
பாடி மகிழும்   [அ]

உப்புக்கடலை யடைந்த தன்மேல்
நடந்த நம் காகுத்தன்   [அ]

வாய் வெடு வெடுப்பாய் பேசி
மடியும் துர்புத்தியுடன்   [அ]

ஸ்ரீமான் வடபத் ராரியர்
பதம் பிடித்துக் கடைத்தேறும்   [அ]

பாம்பின் படங்கள் கிடு கிடென
நடித்த நடன கிருஷ்ணன்   [அ]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube