அடியார் திருவடியைப்பணி நீ

   

நாதநாமக்ரியா ராகம்
ஆதி தாளம்

பல்லவி

அடியார் திருவடியைப்பணி நீ நெஞ்சே அல்லும் பகலும்
ஆடியார் திருவடியைப்பணி நீ நெஞ்சே

அநுபல்லவி

மடியாதே படியளந்தோனடி பிடித்து
கடைத்தேறப் படித்து நடக்கிற   [அ]

சரணங்கள்

கற்றதத்தனையும் பாழாக்காதே கலங்காதே
கற்றதத்தனையும் பாழாக்காதே பாடி பல
பெற்றம் மேய்த்தவன் பொற்றாள்
சித்தமதில் வைத்து நித்தம் துதித்தாடும்   [அ]

பொல்லா வழிசெல்லாதே நீ நெஞ்சே அல்லல் விளையும்
பொல்லாவழி செல்லாதே நீ நெஞ்சே எங்கும்
எல்லாமாய் நின்றவனிணையடி நல்ல வெல்லமென
அல்லும் பகலும் புல்லுமடியார்   [அ]

தேகமென்பது அநித்யம் கேளாய் மோஹத்தை விடுவிடு
தேகமென்பது அநித்யம் கேளாய்--கடல்
காகம்போலக் கலங்காது பாற்
ஸாகர ஸயனனை தாகமுடன் தொழும்   [அ]

மடவார் பின் திரியாதே நீ நெஞ்சே மடமை கொடுக்கும்
மடவார்பின் திரியாதே நீ நெஞ்சே
வடபத்ரஸாயி அரையர் தொழும்
நடனகோபாலனை திடமுடனே நம்பும்   [அ]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube