அடையாளம் தோழிசொலக்கேள்

   

பந்துவராளி ராகம்
அட தாளம்

கண்ணிகள்

அடையாளம் தோழிசொலக்கேள் அங்கையினில்வேணும்
இடையருக்குள்ள நடைகள் இருக்குமதைப்பேணும் [அ]

நீலமேகசாமளாங்க முடைய நின்மலாங்கன்
மூலவஸ்துவாமுகுந்தன் உயர்ந்தவில் மா சாரங்கள் [அ]

எங்களை யீடேற்றவந்த ஈஸ்வரனவனேடி
மங்களமாய் கங்குல்பகலும் கலந்தோனேடி [அ]

பகலிரவறியாமல் பகவானுடனிருந்தோமே
ககவாகனத் தேவனெனக் களிப்புடனிருந்தோமே [அ]

நாராயணானாயிருந்தால் நம்மைக்கைவிடுவானோ
பாராயண நாராயணன் பாலிக்கவருவானோ [அ]

நகைப்பதற்காளானோமே அந்தோ நன்மைக்கிது நாளோ
பகைவரைப்போல் செய்தானே பழிகாரருக்கே நாளோ [அ]

சாதுவாயிருந்தானேயிப்போ சமர்த்தனாய்ப்போனானே
போதுபோ யிராவாமுன்னம் நீபோயழை சகன்றானே [அ]

உச்சியிற் கோணக்கொண்டை யொய்யாரம தாயிருக்கும்
இச்சித்தவர்க்கெல்லாம் எஜமானாயின்பம் பெருக்கும் [அ]

கைதனில் கன்று மேய்த்திடும் கோலிருக்கும் பாராய்
பைதனிற்றுயிலும் பரமன் பாதகமலம் சேராய் [அ]

எந்நேரமும் புன்னகை பொலிந்திருக்கும் பாராய்
மன்னித்தருளும் திருவுள முடையோன் வாராய் [அ]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube