அபசாரப்பட்டலையாதே நெஞ்சே

   

நாதநாமக்ரியா ராகம்
ஆதி தாளம்

பல்லவி

அபசாரப்பட்டலையாதே நெஞ்சே
மெய்யன் பரிடத்தில் [அ]

அநுபல்லவி

உபகாரம் செய்தவர் தம்மை
அனசாரம் செய்து வீணாய் [அ]

சரணங்கள்

கருவத்தாலிருவினை வளர்ந்தேறும் பிறவியறாது
கருவத்தாலிருவினை வளர்ந்தேறும்
கருவத்தால் குருவைப் பழிக்கும் திருவவதாரம்
நான்கோடிரு மூன்றும் செய்வான் பாரில் [அ]

நீங்காப்பிறவி நோய் வளரும் ஆங்காரத்தினால்
நீங்காப்பிறவி வளரும் போங்காலங்காறும்
தூங்காது தூங்கிமேலேறு ஓங்காரத்துட்பொருளாம்
வேங்கடேசன் பால் [அ]

ஆட்டிக்கூத்துப் பார்த்திடும் நாளும் யீட்டியவினை
ஆட்டிக்கூத்துப் பார்த்திடும் ஓட்ட வென்னிலோ
ஆட்டிக்கூத்துப்பார்த்திடு நாளும் ஓட்டியானிரை தன்னை
காட்டில் பேய்தவன்பால் [அ]

மாடமாளிகை ஸதமல்ல தேடிய பொருளொடு மக்களும் ஸதமல்ல
ஓடியேபோகு மாடமாளிகை ஸதமல்ல
மாடமாளிகை ஸதமல்ல மூடிவைத்த வெண்ணெய்
தேடிக்கவர்ந்தவன் பால் [அ]

தடஸ்தஞான சோரூபமான ஜடபாவனையற்று
தடஸ்தஞான சோரூபமான இடர்வினையற்று
தடஸ்தஞான சோரூபமான
வடபத்ரஸாயி போற்றும் நடனகிருஷ்ணன் பால் [அ]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube