ஆதரவவனேயாகு மரனயனுக்கும் தோழி

ஸ்ரீராகம் ராகம்
ஆதி தாளம்

   

கண்ணிகள்

ஆதரவவனேயாகு மரனயனுக்கும் தோழி
சீதாபிராமனையல்லால் தெய்வம்யார் சங்காழி   [கண்ணன்]

ஏதுமொன்று நாமறியோம் என்செய்குவோம் தோழி
கோதைக்குகந்த எங்கள் கோபாலன் சங்காழி  [ஆ]

குற்றமிருந்தாலும் குணமாயதைக் கொளவேண்டும்
பெற்றவன்போலப் பெருமானே பொறுக்கவேண்டும்   [ஆ]

தோஷபோக்ய னென்றேபெயர் துலங்குதேடி தோழி
வாசுதேவன் செய்திடும் வகைஎன்னமோ சங்காழி   [ஆ]

ஈசனை எப்போ தணைவோ மியம்படியே தோழி
நாசமானதே நம்துயர் நயம்பெறச் சங்காழி   [ஆ]

சாதுக்கள் போற்றிசெய்திடும் சா துவேடி தோழி
ஏதுக்கிப்படி செய்கிறான் இயம்புவாய் சங்காழி   [ஆ]

கையாலே கண்ணீர் துடைக்கக் கண்ணன் வருவானோ
நெய்யாற் றிருமஞ்சனம்செய நித்தியன் வருவானோ   [ஆ]

போகுதிலையேயுடல் பூபாரமேடி தோழி
வாகுடன் வாரியணைக்க வருவானோ சங்காழி   [ஆ]

தலைமலையா யிருக்குதித்தைத் தாங்குவதார் தோழி
கலைபயின்ற கண்ணன் வரக்காணோமே சங்காழி   [ஆ]

முகுந்தனைக் காணாமல் முலைகளிடர் தீருமோ
செகத்தனில் நற்பேர்படைத்தான் தீருமோ தீருமோ   [ஆ]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube