ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் ஸங்கீர்த்தன சமிதி
ஸ்ரீமதி S.P.கீதாபாரதி, M.A,(ஸம்க்ருதம்) இவர்
இளம்வயதிலேயே பரமார்த்திக சிந்தனையும்,ஞான வேட்கையும் கொண்டவர்.
பகவத்கீதை,உபநிஷத்துக்கள்,வேதாந்தநூல்கள் ஆகியவைகளை ஆர்வத்தோடு கற்றவர். வணிகப்
பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டே ஸ்ரீமத் ஸ்ரீ பரமானந்தபுரிஆசார்ய ஸ்வாமிகள், ஸ்ரீ யோகானந்த
கிரி ஸ்வாமிகள் ஆகிய மஹான்களிடம் முறையாக சிரவணம் செய்தவர். இவர் அடியிற்
குறிப்பிட்டுள்ள பல உயர் விருதுகளைப் பெற்றவர். ஸம்ஸ்க்ருதம் படித்து அதில் M.A.,பட்டம்
பெற்றவர். நல்ல சொல் வன்மையும் சிறந்த எழுத்தாற்றலும் கொண்ட சிறந்த பெண்மணியாவார். ஸ்ரீமந்
நடன கோபால நாயகி சுவாமிகள் ஸங்கீர்த்தன சமிதியின் தலைவராகவும்
இருந்து நாயகி சுவாமிகளின்புகழ் பரப்புவதில் மிக்க ஆர்வம் உள்ளவர்.
ஸித்தாச்ரம குருஜி பூஜ்ய ஸ்ரீ ஸித்த நரஹரி அவர்கள் முக்தி அடைந்த பின் ஸித்தாச்ரமத்தின்
தலைவராக சிறந்த முறையில் நிர்வகித்து வருபவர்.
பெற்ற விருதுகள்.
1)ஸித்த வேதாந்த ப்ரவீணா
2) வேதாந்த ரத்னாகரி
3)அறவுரை அமுதச் செல்வி
4) வேத பிரகாசக சேவாரத்னா
5) பாரதி புரஸ்கார் விருது
6) சிறந்த பெண்மணி விருது
7) சிறந்த சாதனையாளர் விருது
8) சிறந்த சொற்பொழிவாளர் விருது
9) சிறந்த இசைக்கலைஞர் விருது
1990-ல் 30 மகளிர் ஸ்ரீமதி S.P.கீதா பாரதியின் தலைமையில் ஒருங்கிணைந்து ' கான கலா
சிரோமணி' ஸ்ரீ V.N. நாகராஜ பாகவதர் அவர்களிடம் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக்
கொண்டு ஸ்ரீ V.N.நாகராஜ பாகவதர் கொண்டு ஸ்ரீ V.N.நாகராஜ பாகவதர் அவர்களே மெட்டமைத்த ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகளின்
பாடல்களைக் கற்க ஆரம்பித்தனர். ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் ஸங்கீர்த்தன சமிதி
என்ற பெயரில் முதன் முதலில் 1993-ல் மதுரையில் ஸ்ரீமந் நடன கோபால நாயகி மந்திரில்
அரங்கேற்றம் செய்தனர்.
ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகளின் பாடல்களை எங்கும் பரப்ப வேண்டும் என்ற உயர்ந்த
குறிக்கோளுடன் வேறு பல பக்திப் பாடல்களையும் கற்று மதுரையிலுள்ள திருக்கோயில்களிலும்,பல
அரங்கங்களிலும்,விழா நிகழ்ச்சிகளிலும், திருச்செந்தூர், கன்னியாக் குமரி, பழநி,
இராமேஸ்வரம்,பரமகுடி, சேலம், ஸ்கந்தகிரி, சமயபுரம், திருவானைக்கா, சிக்கல், தஞ்சாவூர்,
கும்பகோணம், அய்யம் பேட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், சென்னை, மேல் மருவத்தூர்,
நெய்வேலி, திருப்பதி,ஆரியங்காவு ஆகிய திருத்தலங்களிலுள்ள,திருக் கோயில்களிலும்
பக்தி இன்னிசை நிகழ்த்தி சுவாமிகளின் புகழை எங்கும் பரப்பி வருகின்றனர். இது வரை 185
மேடைகளில் பாடியுள்ளனர். ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் பாடல்களைப் பாடி ஒரு காசெட்டையும்
வெளியிட்டுள்ளனர்.
Here are some photos.





|