இப் புத்தகதிலுள்ள கீர்த்தனைகள் சி.எம்.வி.கிருஷ்ணமாச்சாரி அவர்களால் மூன்றாம் பதிப்பாக பதிப்பிக்கப்பட்டு நாயகி மந்திர் வாயிலாக1963-ல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ சி.எம்.வி.கிருஷ்ணமாச்சாரி அவர்கள் நாயகி சுவாமிகள் மீது அளவற்ற பக்தி கொண்டவர். சுவாமிகளால் பாடப் பெற்ற கீர்த்தனைகளை சுவாமிகளுடைய சீடர்கள்,பக்தர்கள் அனைவரும் மனதில் பதிய வைத்திருந்ததோடல்லாமல் இசையுடன் பாடும் திறமையும்(1930 களில்) பெற்றிருந்தார்கள்.அக் கீர்த்தனைகளெல்லாம் எப்படியாவது புத்தக வடிவில் கொண்டுவர வேண்டுமென்று தீவிர முயற்சியில் ஈடுபட்டார். அப் பரம பாகவதோத்தமர்களை தம் இல்லத்திற்கு வரவழைத்து நன்கு உபசரித்து அவர்களை பாட வைத்து எழுத்து வடிவில் பதிவு செய்து கொண்டார்.

அதனை கீதா அஷ்டவதானி டி.ஆர். பத்மநாபய்யர், நாயகி சுவாமிகளின் சகோதரரின் மகன் சி.ஆர் ராமய்யர் போன்ற அறிஞர்களின் துணைகொண்டு தொகுத்து அனைத்துப் பாடல்களையும் முதன் முதலில் 1939-ல் முதல் பதிப்பையும்,பிறகு 1949-ல் 2ஆம் பதிப்பையும் வெளியிட்டுள்ளார். அவர் சுவாமிகளின் பாடல்களை தொகுத்துப் பதிப்பித்ததின் மூலம் சுவாமிகளின் அருமை பெருமைகளை அனைவரும் அறிய முடிந்தது. ஸ்ரீ சி.எம்.வி.கிருஷ்ணமாச்சாரி அவர்கள் தாம் ஈட்டிய செல்வத்தை சுவாமிகளின் நல்ல கைங்கர்யங்களில் செலவு செய்து அழியாப்புகழ் பெற்றார். மூன்றாம் பதிப்பிலுள்ள அனைத்துப் பாடல்களும் சி.டியில் பதிவு செய்யப் பட்டுள்ளது. அரும் பணியாற்றிய அமரர் சி.எம்.வி.கிருஷ்ணமாச்சாரியின் பாதாரவிந்தங்களை வணங்குகின்றோம்.


     கோவையில் சென்னைப் பல்கலைக்கழகத் தன்னாட்சிப் பட்டமேற்படிப்பு மையத்தில் நூலகராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கே.ஆர் சேதுராமன் அவர்களால் 1981-.ல் வெளியிட்ட இந் நூல் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் எழுதப் பட்டுள்ளது. 1998 ஆம்ஆண்டு திருப்பணிக்கு முன்பு சுவாமிகளின் பிருந்தாவனத்தில் இருந்த சுவாமிகள் பற்றிய சுவர் ஓவியங்கள் இந் நூலில் காணலாம்.சுவாமிகளிடத்து மிகுந்த பக்தி கொண்டவர். இவர் ஸ்ரீ தியாகராஜ வேங்கடரமண சரித்திரம், தமிழ் நாட்டில் ஸெளராஷ்டிர முழு வரலாறு மற்றும் ஸெளராஷ்ட்ர அகராதியையும் அண்மையில் வெளியிட்டுள்ளார்.


     ராணி சாரீஸ் ஸ்தாபகர் 'நாயகி கைங்கர்ய பூஷணம்' ராணி.வெ.சுந்தர்ராவ் அவர்களின் குமாரர்கள் ராணி.எஸ்.சந்திரசேகரன், ராணி.எஸ்.சாந்தாராம், ராணி.எஸ்.தாமோதரன், ராணி.எஸ்.கோபால்ராம் பாரதி,ராணி.எஸ். கிருஷ்ணமூர்த்தி இவர்கள் நாயகி மந்திரில் பல அறிஞர்கள்,சான்றோர்களைக் கொண்டு ஸ்ரீமந் நடன கோபால நாயகி ஸ்வாமிகளின் கீர்த்தனைகள் ஆய்வுக் கருத்தரங்கம் நடத்திய கட்டுரைகள்,சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு முதலியவைகளை பேராசிரியர்கள் .டாக்டர்தா.கு.சுப்பிரமணியன் மற்றும் டாக்டர் தி.ரா .தாரோதரன் தொகுப்பாசிரியர்களாக இருந்து 1996-ல் வெளியிடப் பட்டுள்ளது.


D.K.Subramanian

      மதுரையிலுள்ள மதுரைக் கல்லூரி தமிழ்த்துரை, இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் தா.கு.சுப்பிரமணியன் ஆசிரியராக இருந்து ஸ்ரீ நாயகி கம்யூனிகேசன்ஸனால் 2001-ல் வெளியிடப் பட்டுள்ளது. இந் நூல் சுவாமிகளுடைய கீர்த்தனைகளைப் பற்றியும் அதில் பொதிந்து கிடக்கும் ஆன்மிகக் கருத்துக்களும், ஆழ்வார்களுடைய வழியில் சுவாமிகள் எப்படிச் சென்றுள்ளார், சமூக மக்களுக்கு அவர் நல்கும் உபதேசங்கள் என்பன போன்றவற்றை மதுரை காமராஜர் பல்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்காக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது 'பட்டி மன்றத் திலகம்' D.K.S பற்றி தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. அவரால் நம் சமூகம் பெருமை அடைகிறது.


     இந்நூல் ஸெளராஷ்ட்ர கல்லூரி சமஸ்கிருத பேராசிரியர்.தி.ரா.தாமோதரன் பதிப்பாசிரியராக இருந்து ஸ்ரீ நாயகி கம்யூனிகேஷன்ஸ் மூலம் 2001-ல் வெளியிடப்பட்டுள்ளது. மேலே 1வது எண்ணில் குறிப்பட்டுள்ளதும் 1963-ல் வெளியிடப்பட்டதுமான சுவாமிகளின் ஸங்கீர்த்தன நூலுக்குப் பின் 37 வருடங்கள் இடைவெளிக்குப்பின் அனைத்து பாடல்களும் அடங்கிய நூல்வெளியாகியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள 3-ஆம் பதிப்பில் இல்லாததும் இப்பதிப்பிலுள்ளதுமான இல்லை வேறு தெய்வம் என்ற பாடலும், பிரபந்து பாணி யிலிருந்து 5 பாராக்களும் இந்த சிடியில் பதிவு செய்யப் பட்டுள்ளது.


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube