ஆழ்வாரெம்பெருமானார் ஜீயர்
திருவடிகளே சரணம் நம்மாழ்வாரெம்
பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஹரிநாராயண கோவிந்த கோபாலா
நம்பினேனுன் பாதம்
இ ரெண்டடி பாட்டு பாடினால்
குண்டடி படாதென்று
ஸ்ரீ விண்டடியர் கூறினார் இதை
கண்டுகொள்பவர்கள்
சண்டனுக்காளாவதில்லை
பிறவித்தொல்லை இல்லை அவர் தமக்கெல்லை
பரமபதம் தில்லை கோவிந்த நாமம்
சொல்ல எல்லா வினை
சொல்லாமல் ஓடிப்போமே கோ
வல்லபனாம் நடனகோபலனே
அல்லால் இல்லை வேறு கதி இங்கே
அல்லும் பகலும் இதை
சொல்வார்க்கிணை யார் இங்கே [இ]
கோவிந்தநாம ஸங்கீர்த்தனம்
நவிலாதிருப்பதே பேய்த்தனம்
நடனகோபாலநாம ஸங்கீர்த்தனம்
கேட்காமலிருப்பது பேய்த்தனம்
பட்டாபிராம் பட்டாபிராம்
துஷ்டநிக்ர ஹரி பட்டாபிராம்
பட்டாபிராம் பட்டாபிராம்
ஸிஷ்டபரிபாலன பட்டாபிராம்
பட்டாபிராம் பட்டாபிராம்
அஷ்டாக்ஷரப் பட்டாபிராம்
பண்டரிபுரவாஸா என் ஆண்டவனே நேஸா
தொண்டுசய்தேன் உன்னை இனி ஆண்டருள்வாய் என்னை
செங்கமலர்ப்பாதா திரு மங்கையர்பணி வேதா என்
அங்கமெல்லாம் உருகி திருநாங்கூரில் வந்தடைந்தேன்
ஸ்ரீ ராமனை துதிசெய் மனமே
ஸ்ரீ வாமனை கதியென்றிரு தினமே
எமனை அடிக்கும் வில்குணமே
காமனை ஜெயிக்கும்சொல் மனமே
வள்ளல் வாஸுதேவ நாமம்
தெள்ளமிர்தம் உள்ளே கொண்டால்
கொள்ளைக்காரன் வரமாட்டான் வந்தாலும்
கொள்ளைக் கிடமில்லாமல் போவான்
ஹரிநாம ஸங்கீர்த்தனம்
பெரியோர்கள் தம் கை தனம்
ஹரிநாம ஸங்கீர்த்தனம்
சிறியோர்கள் அறியார் இனம்
நெறி அறிபவர் இருவினை தீரும்
ஹரிநாம ஸங்கீர்த்தனமே
ஹரியேயுனைப் பிரியாவண்ணம்
அருளாயிதுவே எனதெண்ணம்
ஹரி ஹரி ஹரி ஹரி
|