சர்வலோக தயாபரனாகிய திருமாலின் எண் குணங்களில் ஈடுபட்டு மயங்கி அவன் மீது கொண்ட பக்தி சாகரத்தில் ஆழ்ந்தவர்களே ஆழ்வார்கள் எனப் போற்றப் படுபவர்கள். அவர்களின் உள்ளங்களில் உட்பட்டு நில்லாமல் நின்ற தம் அனுபவங்களையெல்லாம் பாடி பரவினார்கள். அப்படி பாடி பரவிய பிரபந்தங்களின் தொகுப்பே ' நாலாயிர திவ்யப் பிரபந்தம் ' எனப் போற்றப் படுகிறது. வேதத்தின் முன் செல்லும் அவ் வெம் பெருமான் தமிழ் வேதமாகிய திவ்யப் பிரபந்தத்தின் பின் செல்லுகிறான். அப்படிப்பட்ட மங்களம் பொருந்திய நற்குணங்களுக் கெல்லாம் இருப்பிடமாக இருப்பவனும், உயர்வற உயர் நலம் உடையவனும், துயரறு சுடரடி உடையவனுமாகிய பரந்தாமனின் பாதார விந்தங்களில் ஆழ்வார்கள் சமர்ப்பித்த அருள் பாமாலைகளைப் போல, ஸெளராஷ்ட்ர விப்ரகுல தீபம், மதுரையின் ஜோதி, கூடல் நாயகி,ஸெளராஷ்ட்ர ஆழ்வார் எனப் போற்றப் படுபவரும், திருமாலின்மீது ஆறாத காதல் கொண்டு, மனம், வாக்கு, புறத் தோற்றத் திலும் நாயகியாகவே வாழ்ந்த ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமி களும் சௌந்தர்ய ஸெளராஷ்ட்ர மொழியிலும், தேனினும் இனிய தமிழிலும் பல கீர்த்தனைகளை திருமாலின் மீது பாடியுள்ளார்.

ஆழ்வார் திருநகரியில்,வடபத்ராரியர் என்ற ஸத் குருவின் அருளால் திருமாலின் பக்தராக, தாஸனாகமாறியதுடன், ஆழ்வார்களைப் பற்றியும், அவர்தம் பாசுரங்களைப் பற்றியும்., ஆச்சாரியர்களைப் பற்றியும் நன்கு கற்றறிந்திருக்கிறார். அதனால் தான் ஆழ்வார்களின் சொல்லையும், பொருளையும் தம் பாசுரங்களில் கையாண்டிருக் கிறார்.

அவைகளில் சில

'' ஜனி வசிரியாஸ் ஜனி வசிரியாஸ்
பூர்வாச்சார்யுனு நிஜம் மெனி வசிரியாஸ்
பூர்வாச் சாரினு மார்கு3 பு4லோகுர்
ஸொடி சலஸ்தெ து3ர்மார்கு3

பூர்வாச்சாரியர்கள் காட்டிய வழியினின்று தவறி செல்லுதலே துர்மார்கம் என்கிறார்.

'' ராமானுஜ பாஷ்யம் ஸெய்லுவோ
ராமானுஜ குரு தி4யான்கரி ஜிவ்லுவோ
ராமா கிருஷ்ணா மெனி நசொபா3
ராமானுஜா மெனி ராத் தீஸும் வசொபா
மோட்சிக் ஏஸ்வாட் ஸொட3ன் ஹோனா எகொ
ஸாட்சி ஆழ்வார்னு ஸேனா
ஆழ்வார்னு க3வ்னி ஜனெத் பாப்
மூள் ஸெர ஜாய் யெமொ மொன்னு உனேத் ''

ஸ்ரீ ராமானுஜரின் பாஷ்யங்களைப் பாருங்கள்.ஸ்ரீராமானுஜ குருவை தியானம் செய்து வாழுங்கள். ராமா கிருஷ்ணா என்று ஆடிப் பாடுங்கள். இரவும் பகலும் ராமானுஜா என்று சொல்லுங்கள் . மோக்ஷத்திற்கு செல்வதற்கு இதுவே வழி. இதற்கு சாக்ஷ¤யாக ஆழ்வாராதிகள் இருக்கின்றனர்.ஆழ்வார்கள் பாசுரங்களில் மனம் செலுத்திஅறிந்தால் செய்த பாபங்கள் எல்லாம் வேறோடு அறுபட்டுப் போகும் என்று கூறி ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் மேல் கொண்டுள்ள தம் பக்தியை வெளிபடுத்துகிறார்.

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார்,பேயாழ்வார் எனப்படும் ஆழ்வார்கள் '' முதலாழ்வார் மூவர் '' எனப்படுபவர்கள். அவர்களுள் திருமாலின் பாஞ்ஜ சன்ய அம்சமாய் காஞ்சி புரத்தில் பொய்கை புஷ்கரணியிலுள்ள தாமரை மலரில் அவதரித்தவர் பொய்கையாழ்வார். பன்னிரு ஆழ்வார்களுள் முதல்வராகவும் விளங்குபவர் இவரே. இவர் தம் இயற்பா முதல் திருவந்தாதியில்

'' நாடிலும் நின்னடியே நாடுவன் நாள் தோறும்
பாடிலும் நின்புகழேபாடுவன் - சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு ''

நெஞ்சால் நினைக்கையில் உன் திருவடிகளையே எண்ணுவேன். தினந்தோறும் உன் திருப்புகழையே பாடுவேன். தலையில் எதையாவது அணிய விரும்பினால் சக்கரக் கையனான உன் அழகிய பாதங்களையே சூடுவேன் என்னும் பொருள்பட பாடியுள்ளார். மேலும் அவரே

'' தோள் அவனை அல்லால் தொழா, என் செவி இரண்டும்
கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும், நாநாளும்
கோள் நாகணையான் குரைகழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம் ''

தோள்களுடன் இணைந்த என் கைகள் திருமாலை அன்றி வேறு எவரையும் தொழமாட்டா, என் இரு காதுகளும் அவன் இனிய சொற்களையே கேட்கும், தினமும் என் நா திருவனந்தாழ்வான் மேல் கண் வளர்பவனின் திருவடிகளையே துதிக்கும். உலகத்தார் விரும்பும் புலன் இன்பங்களை அணுக வெட்கப் படுவேன் என்று பாடியுள்ளார்.

இதே கருத்துபட கௌஸ்துப அம்சமாக அரச குலத்தில் அவதரித்த ஸ்ரீ குலசேகர ஆழ்வார் தம் முகுந்தமாலையில்

'' நமாமி நாராயண பாத பங்கஜம்
கரோமி நாராயண பூஜனம் ஸதா
வதாமி நாராயண நாம நிர்மலம்
ஸ்மராமி நாராயண தத்வ மய்யயம்''

ܮஅடியேன் நாராயண திருப்பாத கமலங்களை வணங்குகிறேன் நாராயணனை எப்பொழுதும் பூஜை செய்கிறேன். நாராயணனின் புனிதத் திருநாமங்களைத் தியானம் செய்கிறேன். அழிவற்ற நாராயண தத்துவத்தை நினைக்கிறேன் என்று பாடுகிறார்.

இக் கருத்தையே நம் நடன கோபால நாயகி சுவாமிகளும்

'' க3வெதி ஸ்ரீ ரெங்கா3க் கௌ3நொ
பொ3வெதி ஸ்ரீ ரெங்கா3க் பொ3வ்நொ
ஸியெதி ஸ்ரீ ரங்கா3க் ஸநொ அமி
ஜிவெதி ஸ்ரீ ரெங்கு3மூஸ் ஜிவ்நோ ''

பாடினால்ஸ்ரீரெங்கனையேப் பாடவேண்டும், அழைத்தால் ஸ்ரீ ரெங்கனையே அழைக்க வேண்டும், பார்த்தால் ஸ்ரீ ரெங்கனையே பார்க்க வேண்டும், நாம் வாழ்ந்தால் ஸ்ரீ ரங்கத்திலேயே வாழ வேண்டும் என்று பாடியுள்ளார்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கீதை (கீ 4--11)யில் யார் என்னை எப்படி வழிபடுகிறாரோ அவர்க்கு நான் அப்படியே அருள் புரிகிறேன் என்றும் மேலும் (கீ 7-21 ல்) எந்தெந்த பக்தன் எந்தெந்த தேவ வடிவத்தை, சிரத்தையோடு அர்ச்சிக்க இச்சிக்கிறானோ அவ்வவனுடைய அந்த சிரத்தையை அசையாததாக நான் செய்கிறேன் என உபதேசித்துள்ளார். இக் கருத்தை ஆழ்வார்கள் கையாண்டிருக்கிறார்கள்.

பொய்கையாழ்வார்

'' தமர் உகந்து எவ்வுருவம்,அவ்வுருவம் தானே,
தமர் உகந்தது எப் பேர், மற்று அப்பேர்,--தமர் உகந்தது
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ் வண்ணம் ஆழியான் ஆம் ''

சக்ரதாரியான பகவான் அடியார்கள் விரும்புகிற உருவத்தைத் தானே அடைகிறான். மேலும் அந்த பக்தர்கள் விரும்பிய பெயரையே அடைகிறான். அவர்கள் எவ்வாறு விரும்பி இடைவிடாமல் தியானம் செய்வாரோ, அவ்விதமாகவே ஆகிவிடுகிறான் என்று கூறுகிறார்.

நம் சுவாமிகளோ இறைவன் ஒருவனே, அவனே அடியார்க்கு எளிதாக அருள் புரிகின்ற திருமால் என்கிறார்

''ஹரி வினா தே3வ் து3ஸர் நீ:னா த்யே
ஹரி தேஸ்தே மோட்சி''

ஹரியை விட வேறு தெய்வம் இல்லை, ஹரிதான் மோட்சத்தைக் கொடுக்கிறான் என்றும்

'' ஸாப்ஹோர் நிஞ்ஜிரெத்தெனோஸ் ஸாக்ஷாத் பரப்ரஹ்மம் ''  பாம்பு படுக்கையில் பள்ளி கொண்டிருப்பவனே சாட்சாத் பரபிரம்மம் என்றும்

''இல்லை வேறு தெய்வம் -- ஹரியைவிட
இல்லை வேறு தெய்வம்
நடன கோபாலனையல்லால்
கிடையாதிவ்வுலகில் தெய்வம்''

என்றும் கூறி ஆழ்வார் கருத்தினின்று வேறுபடுகிறார். சடகோபர், மாறன், வகுளாபரணர்,பராங்குசன் என்றெல்லாம் .போற்றப்படுகின்ற நம்மாழ்வார்

''சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ
என்னாவில் இன்கவி யானொரு வர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து
என்னானை என்னப்பன் எம் பெருமானுளனாகவே ''

சொன்னால் விரோதமாகும், ஆனாலும் இதை நான் சொல்லு வேன். கேட்பீர்களாக, என் நாவினால் இனிமையான கவிதையைக் கொண்டு எம்மனிதரையும் பாடமாட்டேன், ஆனால் தென்னா தென்னா என்ற ஓசையுடன் வண்டுகள் மொய்க்கின்ற திருவேங்கடத்தில் கோயில் கொண்டுள்ள திருவேங்கடமுடையானை மட்டுமே பாடுவேன் என்று பாடியுள்ளார்.

பக்திசாரர் என்று போற்றப்படுகின்ற திருமழிசை ஆழ்வார் தம் நான்முகன் திருவந்தாதியில்

''நாக்கொண்டு மானிடம் பாடேன் நலம் ஆக,
தீக்கொண்ட செஞ்சடையான் சென்று என்றும்-பூக்கொண்டு
வல்லவாறு ஏத்த,மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு ''

தீபோல் சிவந்த சடை பெற்ற சிவன் பூக்களாலே என்றும் வழிபட்டுத் துதிக்கும் பெருமையுடைய வைகுந்த நாதனின் திருவடிகளுக்கு உரிய பாசுரங்களை அன்றி என் நாவால் மனிதர்களைப் பற்றிப் பாடமாட்டேன் என்று கூறுகிறார். பகவான் கொடுத்த ஞானம்,நாவன்மை ஆகியவற்றை பகவானுக்கே அர்ப்பணிக்க வேண்டும் என்னும் கொள்கையுடைய இவ்வாழ்வார்கள் கூறிய கருத்துப்படியே நாயகி சுவாமிகளும் ஸ்ரீ ஹரியைத் தவிர வேறெவரையும் போற்றவில்லை. அவர் தம் பாடல்களில் ஸ்ரீ ஹரியைத் தவிர வேறு தெய்வங்களின் பெயரைக் கூட சொல்லாத வீர வைஷ்ணவராகத் திகழ்ந்திருக்கிறார்.

வெற்றிக்கு அடையாளமான சக்ராயுதத்தை ஏந்தியிருக் கின்றவனும்,நீலமணி நிறத்தை உடைவனுமாகிய திருமாலை நம்பி, அவனுக்கே அன்பு பூண்ட அடியார்க்கு அடியார்கள், பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் எனப்படும் நான்கு வகைப்பட்ட சாதிகளைவிட இழிந்த சாதியானாலும் சிறிது நன்மையே அறியாத இழிந்த மூடர்களாக இருந்தாலும், கொடுஞ் செயல்களைச் செய்யும் சண்டாளர்களைக் காட்டிலும் சண்டாளர்களாயிருந்தாலும், அவர்களே எம் தலைவர், எம்மால் வணங்¢கப்படும் அடியார் ஆவார் என்ற பொருள்பட

''குலம் தாங்கு சாதிகள் நாலிலுங் கீழிழிந்து எத்தனை
நலந் தான் இலாத சண்டாள சண்டாளர்களாகியும்
வலந் தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணன் ஆளென்று உள்
கலந்தார் அடியார் தம் அடியார் எம்மடிகளே''

இக்கருத்தையே தொண்டரடிப் பொடியாழ்வார்

''அடிமையிற் கடிமை இல்லா அயல் சதுப்பேரி மாரில் குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் ! மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும், அரங்கமா நகருளானே ! ''

உன் கைங்கர்யத்தில் ஆர்வம் இல்லாது மாறுபட்ட நால் வேதம் பயிற்சியுடைய அந்தணரைவிடவும், திருமுடியில் துழாய் மாலை சூடிய திருவரங்கா ! உன் திருவடிகளில் அன்பு பூண்டு அடிமை செய்யும் கீழ்க்குடியில் பிறந்த சண்டாளர் இடத்தே தான் நீ விருப்பம் கொண்டுள்ளய். மேலும் அவரே

' திருமறு மார்ப ! நின்னைச் சிந்தனையுள் திகழ வைத்து
மருவிய மனத்தர் ஆகில், மாநிலத்து உயிர்கள் எல்லாம்
வெருவு உறக் கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினைய ரேலும்
அருவினைப் பயன்துய்யார், அரங்க மாநகருளானே ! ''

திருமகள் தங்கும் மார்புடைய திருவரங்கா! உலகிலுள்ள பிராணிகள் அஞ்சும்படி கொலை செய்து தீக் கொழுத்தும் பாவிகள் ஆனாலும் உன்னைச் சிந்தையிற் கொண்டு நீயே உபாயம் என்று நம்புபவர்களாகில் அவர்கள் தங்கள் பாவ பலனை அடைய மாட்டார்கள். என்கிறார்

இதே கருத்தை இக்கலிகாலத்தில் நாம சங்கீர்த்தனத்தைப் போன்ற முக்தியடைவதற்குரிய எளிமையான வழி வேறில்லை என்றும், கேசவனே முக்தியளிக்கவல்ல தெய்வ மென்றும் அனவரதமும் மக்களுக்கு உபதேசித்த நம் நாயகி சுவாமிகள்

'' ஏ ஜாத் த்யே ஜாத் மெநி நீ:ரே துஸர் கோன்
ஜாத் க3வெதிந்நு ஹரி ஸாய்ரே தூ
ஜானகொ மொந்நு ரா:ரே ஸ்ரீ
தொகொ மொகொ சொக் க3தி தே3ய்ரே
குல கோத்ரும் காய் ஸேரே
கோ3பால ஹரி கொங்கிகு ஸாய்ரே
தி3ல்லொ ஸொண்ணாஸ்தக தூ போ3வ்லே ஸ்ரீ
தே3வுஸ் அஸ்கினாக் ஜீவ்ரே ''

அதாவது, இந்த ஜாதி அந்த ஜாதி என்று ஒன்றுமில்லை எந்த ஜாதியினரும் பரமனைப் பாடினால் ஸ்ரீ ஹரி அவனுக்கு அருள் புரிவார். மனமே ! நீ கண்டபடி திரியாமல் ஒரே நிலையுடன் இரு. உனக்கும், எனக்கும் அவர் நற்கதியைத் தருவார். குலம் கோத்திரம் முதலியவை களில் என்ன இருக்கிறது. கோபால ஹரி எவரையும் கருணையுடன் நோக்குகிறார் என்று பாடுகிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் (கீ 9--30)

'' அபி சேத்ஸுது3ராசாரோ ப4ஜதே மாமனன்யபா4க்
ஸாது4ரேவ ஸ மந்தவ்ய: ஸம் யக்வ்யவஸிதோ ஹி ஸ: ''

கொலை, களவு முதலிய பாவச் செயலைச் செய்கின்ற துராசாரனும், வேறு ஒன்றையும் எண்ணாது என்னை பஜிப்பானானால், அவன் சாது என்றே கருதப்பட வேண்டும் ஏனென்றால் அவன் நன்கு தீர்மானித்தவன் ஆகிறான் என்று கூறுகிறார்.

ஸ்ரீமத் பகவத் கீதையின் கருத்தைப் பற்றியே ஆழ்வார்களும் ஸ்ரீ நாயகி சுவாமிகளும், பக்தி செய்பவர்கள் எக்குலம், எச்சாதியினராக இருந்தாலும் அவர்கள் தொண்டர் குலம் என்ற ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்று அவர் தம் பாடல்களிலிருந்து நன்கு விளங்குகிறது.

இறைவனை அடைய பல மார்க்கங்கள் இருந்தாலும், அவனை அடைய எளிய வழி பக்தி மார்க்கமே. பக்தனின் பக்தி வலையில் மட்டுமே பகவான் அகப்படுபவர். இறைவனை நோக்கி நாம் ஓரடி வைத்தால், பத்தடி நம்மை நோக்கி ஓடி வருவான் இறைவன். ஆகவே அதிக சிரம்ப்பட்டு காய்கனி துய்த்து, காயம் ஒறுத்து உலகில் திரிய வேண்டாம் என்பதை பேயாழ்வார் தம் மூன்றாம் திருவந்தாதியில்

''பொருப்பிடையே நின்றும், புனல் குளித்தும்,ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா, விருப்பு உடைய
வெஃ காவே சேர்ந்தானை மெய்ம் மலர் தூய்க் கை தொழுதால்
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து ''

உலகோரே ! நீங்கள் மலைகளிடையே நின்றும், நீர்த் துறைகளில் குளித்தும், ஐந் தீ நடுவே நின்றும் தவம் செய்ய வேண்டாம் எல்லாரும் விரும்பும் திருவெஃகாவில் கண் வளரும் பெருமானைப் பயன் எதிர்ப் பாராமல் பூ இட்டு வணங்கினால் போதும், உம் பாவங்கள் யாவும் நமக்கு இது இடம் இல்லை என்று எண்ணி ஓடிவிடும் என்கிறார் இதே கருத்தை திருமழிசை ஆழ்வார், தம் நான்முகன் திருவந்தாதியில்

'' வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்திக்
கூடு ஆக்கிநின்று உண்டு, கொண்டு உழல்வீர்--வீடு ஆக்கும்
மெய்ப்பொருள் தான் வேதமுதற் பொருள் தான் விண்ணவர்க்கு
நற் பொருள் தான் நாராயணன் ''

வீடு அடையும் வழியை விட்டு உடம்பை வருத்திக் கூடாக்கித் தவம் செய்து பின் உண்டு உழல்பவரே! ஸ்ரீமந் நாராயணனே உண்மை உபாயம் ஆவான் வேதப் பொருளான முழுமுதற் கடவுள் அவனே! நித்திய சூரிகள் தலைவன் அவனே! என்று கூறுகிறார்

மேலும் ஆழ்வார்களிலே கடைகுட்டி என போற்றப் படுபவரும் திருமங்கைக்கு அரசனாக இருந்தவர், கள்வராக மாறி கொள்ளை அடித்து அரங்கநாத ஆலயத்தில் மதில் சுவர் எழுப்பியவரும், நாலாயிர திவ்ய பிரபந்தத்திலேயே அதிகமான பாசுரங்களை இயற்றியவரும், பரகால நாயகியாக மாறி தம் மனம் கவர்ந்த திருமாலை அடைய மடலேறத் துணிந்தவருமாகிய திருமங்கையாழ்வார் இறைவனை அடைய மேற் கண்ட ஆழ்வார்களைப் போன்றே தம் திருமொழியில்

'' காயொடு நீடு கனி உண்டு,வீசு
கடுங்காவல் நுகர்ந்து, நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா --
திருமார்பனைச் சிந்தையில் வைத்தும் என்பீர்

என்று பாடியுள்ளார்இவ்வாழ்வார்களின் கருத்தைப் பின்பற்றியே ஸ்ரீமந் நாயகி சுவாமிகள்

'' தொ3ங்க3ர் ராணும் ஹிங்கன் வேஸ்னி
தொ3ங்க3ர் அங்க்3ளி தெ4ரெ ரெங்கா3க்
ஸெங்கு3 ஸவொ யேட் ''

மலைகளிலும், காடுகளிலும் ஏறி தவம் புரிய வேண்டாம், கோவர்த்தன கிரியை தம் சுண்டு விரலில் குடை போல் பிடித்து கோக்களைக் காத்த ஸ்ரீ ரெங்கனை துணையாக பற்றிக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு அறிவுறை கூறுகிறார்

'அரிது அரிது மானிடராதல் அரிது ' என்றார் ஒளவையார். அடைதற்கரிய பகுத்தறிவு வாய்ந்த மானுடப் பிறவியை பெற்ற நாம் பந்த பாசங்கள் நிறைந்த இவ்வுலகில் அலை கடல் துரும்பு போல அல்லற்பட்டு, இல்லற வாழ்வின் சிற்றின்பங் களில். மூழ்கி பெரும் பேரின்பமாகிய எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளை மறந்து, எல்லையில்லா துன்பங் களுக்கு ஆளாகி அவதிப் படுகிறோம். இம்மானிடப்பிறவி முற்பிறப்பில் செய்த புண்ணியப் பலன்களின் விளைவாய் ஏற்பட்ட பெருமை மிக்க பிறவியாகுமென்று பெரியோர் கூறுவர். மேலும் பிறவி நோய்க்குக் காரணமாக இருக்கும் இடம் இம் மானுடப்பிறவி.இது பிறவி என்னும் பெரு நோயைப் போக்கும் சிறந்த சாதனமாகவும் உள்ளது.பிறவி என்னும் பெருங் கடலை நீந்திக் கடந்தால் தான் இறைவன் திருவருளைப் பெறமுடியும் என்பதை தெய்வப் புலவர் திருவள்ளுவர்

'' பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார் ''

'' பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு ''

என்று கூறியுள்ளார்நம்மாழ்வாரும் பிறவிக்கடலைக் கடக்கும் உபாயமாக ' '

'' வீடுமின் முற்றவும்
வீடு செய்து உம்முயிர்
வீடுடையானிடை
வீடு செய்ம்மினே ''

நான், எனது என்னும் அகங்கார, மமகாரங்களால் உண்டாகும் இறைவனுக்கு புறம்பானவற்றை விடுங்கள். பிறகு உங்கள் ஆத்மாவைப் பரம பதம் தரும் எம்பெருமான் பக்கலில் சமர்ப்- பித்து விடுங்கள் என்று கூறியள்ளார். பெறுதற்கரிய மனிதப் பிறவியைப் பெற்ற நாம் இப்பிறவியின் நிலையாமையை உணர்ந்து கொள்வது மிகமிக அவசியம்

இம்மானுடப் பிறவியின் ஆயுள் நூறு என்று நாம் கணக் கிட்டோமானால் அதில் பாதியான ஐம்பது ஆண்டுகள் உறக்கத்திலேயே கழிந்து விடுகின்றன.பதினைந்து ஆண்டுகள் உலகமறியா இளமைப் பருவத்தில் கழிந்து விடுகின்றன. இன்னமும் மீதியுள்ள ஆண்டுகள் நோய், பசி, முதுமை போன்ற துன்பங்களில் வீணாகி விடுகின்றன. ஆதலால் எனக்குப் பிறவியே வேண்டாம் என்று தொண்டரடிப் பொடி ஆழ்வார் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீரங்கநாதரிடம் வேண்டிக் கொள்கிறார்.இதோ அந்த அருமையான பாசுரம்

'' வேத நூல் பிராயம் நூறு மனிதர் தாம் புகுவரேலும்
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே!''

கருவுற்ற பெண்ணைக் கண்டு, இவளுக்கு இன்னும் பத்து மாதங்களுள் குழந்தை பிறந்து விடும் என்றும், தென்னையை நட்டால் ஒரு குறிப்பிட்ட5, 6 ஆண்டுகளில் பலன் கொடுக்கும் என்றும் திட்டவட்டமாகக் கூற முடியும். ஆனால் உடம்பு கொண்ட உயிர்கள் எந்நாளில் தன் உடலை விடும் என்று யாருமே அறிந்து கூறமுடியாது.(நாயகி சுவாமிகள் தாம் முக்தி அடையும் தினத்தை முன் கூட்டியே அறிவித்துள்ளார்) இவ்வுடம்பு மின்னலைப் போன்று நிலையற்றது என்பதை நம்மாழ்வார்

'மின்னின் நிலை இல மன் உயிர் ஆக்கைகள்
என்னுமிடத்து இறை உன்னுமின் நீரே ''

அழிவற்ற ஆத்மாக்கள் தங்கும் உங்கள் உடம்புகள் மின்னலைப் போல நிலையற்றவை. எனவே நீங்கள் இறைவனை நினையுங்கள் என்று கூறுகிறார். மேலும் அவரே

''கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ் சோலை
தளர்வு இலர் ஆகில் சார்வது சதிரே''

அறிவு கொழுந்து விட்டு வளரும் ஞான ஒளி உடைய இளம் வயது போவதற்கு முன்னே, குன்றாத ஒளி உடைய மாயோனின் திருமாலிருஞ் சோலை மலையை அடைவது உங்கள் ஆத்ம உய்வுக்குச் சிறந்ததாகும். வளர்ந்து செழித்த இளஞ்சோலைகளால் சூழப்பட்ட அம்மலையைத் தளர்ச்சி இல்லாமல் அடைவதே ஆத்மாவுக்கு ஏற்ற உறுதிப் பொருள் ஆகும்.

மேற்கண்ட ஆழ்வார்கள் கூறியவாறே நாயகி சுவாமிகள்

'' திந்நு ஜனன் முஸுனா உராவ் திந்நு ஜவள்னாஸ்தக் மொந்நு ப4ஜநொ காரி''

உடல் வீழும் நாளை கணிக்கமுடியாது,அதனால் வாழ்நாளில் மீதமுள்ள நாட்களில் மனமே நீ பகவானைத் துதி செய்

'' ஸோபந்நாஸ் தேஸுநுகு ராட் ஹொய்
ஸொம்ப2ரு ஜிவேதி காய் ரா:நா த4மி ஜேடை3
தீ3 பந்நாஸ§மு யோக் பந்நாஸ் ஹோங்கும் ஜேடை3
காய் பந்நாஸ் யே பந்நாஸ் காய் நிஜம் த4ம் ஜேடை3 ''

ஐம்பத்தாறு தேசங்களுக்கு சக்ரவர்த்தியாக இருந்து, மகிழ்ச்சி யான வாழ்கையை நடத்தியிருந்தியிருந்தாலும் இவ்வுலகில் நிலைத்து நில்லாமல் அழிந்து போகக் கூடியவனே. மனிதன் வாழும் வாழ்நாள் நூறு எனில் அதில் ஐம்பது ஆண்டுகள் தூக்கத்தில் கழிந்து விடுகின்றன, மீதமுள்ள ஐம்பது ஆண்டுகள் இது என்ன பெரிய ஐம்பதாண்டு, காலப் போக்கில் கழிந்து விடுமே என்று உடல் நிலையாமையை வலியுறுத்தி, உடல் வீழு முன்னர் ஸ்ரீ ஹரியை பஜியுங்கள் என்கிறார். மேலும்

'' ரோக் ஹால் ஸரீர் ஜேடை3
தா4க் ஹால் ஸரீர் ஜேடை3
ஸாக் ஹால் ஸரீர் ஜேடை3ரே
வாக் ஐகி தூ அத்த தே3வுக்
தெக்கஸ்தக் த்யானும் ஸா பவ
ரோக் மொரநுஜ்வாவ் ஜேடை3ரே''

வியாதியினாலும், பயத்தினாலும் ஏதாவது ஒரு காரணத்தினாலும் உடல் மாண்டு விடும், அதனால் நான் சொல்லுவதை இப்போதே கேள். கடவுளைக் காண தியானம் செய் பிறந்திறக்கும் பிறவித்தளை அற்றுவிடும் என்றும்

''ஹட்க கெண்டா4ல் ஹொயெ கே4ரு--அஸ்கி
வியாதின் அவஸ்தக் லவ்ரேஸ் நொவ் தா3ரு
தெ2ட்கி பொடெத் முட்கொ ஹொய் ஜாய் புட்கோ ஸரீர்''

எலும்பு சதையினால் உண்டான வீடு, எல்லா வியாதிகளும் ஏற்பட ஒன்பது வாசல்களை படைத்திருக்கிறான் இறைவன். மேலும் ஒன்பது ஓட்டைகளையுடைய இந்த ஸரீரம் தடுக்கி விழுந்தால் முடமாகிப் போகும் , ஆகையால் உடல் வீழு முன்னர் இறைவனைத் துதிக்கவேண்டும் என்கிறார்

நம்மாழ்வார்

ܿஅழுவன், தொழுவன், ஆடிக் காண்பன்,பாடி அலற்றுவன்,
தழு வல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிந்திருப்பன், ''

தான் இறைவனை அடைய,அழுவேன், கை கூப்பி தொழுவேன், ஆடிப் பார்ப்பேன், உன் புகழைப் பாடி பாடி புலம்புவேன். நீ வரும் பக்கம் நோக்கி, வெட்கி, தலை கவிழ்வேன். இவ்வாறு உள்ள என்னை உன் திருவடி சேரும்படி வழி காட்ட வேண்டும் என்று தாம் செய்த செயல்களை விளக்குகிறார்.

அவ்வாறே நாயகி சுவாமிகள்

''சொக்கட் பிஸொ தெ4ரி க3வ்னாஜியெத் நீ: கதி யேடு''   சொக்கட் பிஸொ --( கடவுள் மேல் பக்தி கொள்பவன்) பைத்தியம் பிடித்து இறைவனைப் பஜிக்காதவனுக்கு கடைதேறும் வழியில்லை. என்றை கூறுவதோடு

''ஹ்ருஷிகேஸா தொர பிஸ தெரி தொக பொவெஸ்''   ஹ்ருஷிகேஸா, உன் மேல் பைத்தியம் கொண்டு உன்னையே அழைக் கிறேன் என்கிறார். நம்மாழ்வாரின் பாசுரத்தின் சாரத்தையே கூறுவது போல நாயகி சுவாமிகள்

'' ஹரி க3வி நசி பொவி ஆனந்தும்
பு3டஸ்தேஸ் ஆங்கு3 விஸ்ரை பொடயி
பிஸ தெ4ரெஸ்தெந ஸொக பி3ஸயி
4மயி கொங்கிடி பி2ரிஸெய் பொவயி ''

ஸ்ரீ ஹரியைப் பாடி,ஆடி,அழைத்து ஆனந்தத்தில் மூழ்கி,தேகம் மறந்து வீழ்வான். பைத்தியம் பிடித்தவன் போல், அமர்வான், ஓடுவான் அங்கும் இங்கும் திரும்பிப் பார்த்து இறைவனை அழைப்பான் என்கிறார்.

ஸ்ரீ பகவான் கீதையில்

அந்த காலே ச மாமேவ ஸ்மரன் முக்த்வா கலேவரம்
ய: ப்ரயாதி ஸ மத்பா4வம் யாதி நாஸ்த் யத்ர ஸம்சய :''

மரண காலத்திலும் என்னையே நினைத்து கொண்டு,உடலைத் துறந்து யார் போகிறானோ அவன் என் சொரூபத்தையே அடை கிறான், இதில் சந்தேகமே இல்லை என்று அரச்சுனனுக்கு உபதேசிக்கின்றார். உடலை உகுக்கும் போது ஜீவன் பரத்தினை பாவிக்க வல்லவனாயின் அவன் மீண்டும் பிறவாது பரத்தினை அடைகிறான். இது விதேக முக்தி எனப்படும். இவ் விதிக்கு விலக்கு இல்லை. ஆகவே இதைப் பற்றி ஐயம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது மிகவும் எளிய வழியாக இருக்கிறதே என்று நமக்குத் தோன்றும். ஆனால் அது ஒன்றும் எளிய செயலல்ல. உயிரானது உடலை விட்டுச் செல்லும்போது இறைவனின் நினைவு இருக்க வேண்டுமெனில் அதற்கு நீண்ட கால பயிற்சியும், வைராக்கியமும் தேவை. இவை இல்லாவிடில் முடியவே முடியாது. நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தந்த தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் எப்பொழுதும் 'ராம ' மந்த்ரத்தை உச்சரித்து வந்தமையால் தான் அவர் கோட்ஸே என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டபோதும் 'ராம், ராம் ' என்று கூறி தம் பூத உடலை நீத்தார். எனவே தான் நம் நாயகி சுவாமிகள் தம் தமிழ் மற்றும் ஸெளராஷ்ட்ர மொழிப் பாடல்கள் பலவற்றில் ஹரியின் திருநாமங்களை சொல்ல வேண்டும் என்று உபதேசிக்கின்றார். அதுவும் எப்பொழுது சொல்ல வேண்டும் என்பதை

''ஹுடினும் பி3ஸினும் சல்நிம் ஹோங்கும்
நடன கோ3பால் த்4யான் ஸொண்ணொகொ மொந்நு ''

எழுந்திருக்கும் போதும், உட்காரும் போதும், நடக்கும் போதும் தூங்கும் போதும் நடன கோபாலன் தியானத்தை விட்டு விடாதே மனமே! என்று கூறுகிறார். எப்பொழுதும் இறைவனின் திருநாமங்களைக் கூற வேண்டு மானால் என்ன செய்ய வேண்டும் என்பதற்குச் சிறந்த உபாயத்தைக் கூறுகிறார் விஷ்ணு சித்தர் என்று அழைக்கப் பெறுபவரும் இறைவனுக்கே பல்லாண்டு பாடிய பரம பக்தரான பெரியாழ்வார்

''மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை
மானிட சாதியின் பேர் இட்டால் மறுமைக்கு இல்லை,
வான் உடை மாதவா! கோவிந்தா! என்று அழைத்தக் கால்
நான் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள், ''

கர்மங்களின் காரணமாக மனித இனத்தில் பிறப்பவருக்கு மனிதப் பெயர்களை இடுவது மோட்சமாகிய மறுமைக்கு உதவாது, பரமபத நாதனை '' மாதவா, கோவிந்தா '' என்று அழைத்தால், நாராயணன் பெயருடைய பிள்ளையின் தாய் நரகம் அடைய மாட்டாள். ஆகையால் பிறக்கும் குழந்தைகளுக்கு திருமாலின் திருப்பெயர்களை இட்டு அழைத்தால் அனைவரும் நற்கதி பெற முடியும் என்று வழி காட்டுகிறார்.

மேலும் பெரியாழ்வார்.மரணக்காலத்தில் ஏற்படப் போகின்ற நிலைமைகளை எடுத்துக் கூறும்போது ' எனக்கு வலிமையெல்லாம் இழக்கும் காலம் வரும். முதுமையில் தள்ளாடி விழி பிதுங்கி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குகின்ற காலம் வரும். உலகப் பற்றில் மாட்டிக் கொண்ட நான் அதைவிட முடியாமல் பாயில் கிடக்கக் கூடிய காலத்தில் உன்னை நான் நினைப்பதற்கான சூழ்நிலை நிச்சயம் ஏற்படாது நரக வேதனை அனுபவிக்கும் போது ஸ்ரீமந் நாராயணனை நினைக்க விடாமல் எம தூதர்கள் இடையூறு செய்வார்கள். மாயை என்ற பாசி படர்ந்து ஸ்ரீ மாதவனை பார்க்க முடியாமல் கண்களை மறைக்கும், அன்றைக்கு நினைக்க வேண்டியதை இன்றே நினைத்துக் கொள் கிறேன். இன்றைக்கு உன்னை நினைப்பதை அன்றைக்கு நினைப்ப தாகக் கருதி துன்பங்களை நீக்க வேண்டும் ' என்று கூறி கீழ்க்கண்ட பாடலைப் பாடுகிறார்.

''துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்து துணையாவாரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போது
அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத் தரவணைப் பள்ளியானே!

மேலும்

ஆம் இடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே, என்றும்

சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம்
சொல்லினேன், என்னைக் குறிக் கொண்டு, என்றும்

அல்லற்படா வண்ணம் காக்க வேண்டும், என்றும்

மேலும்

எண்ணலாம் போதே, உன் நாமம் எல்லாம்
எண்ணினேன், என்னைக் குறிகொண்டு, என்றும் வேண்டுகிறார்

இக் கருத்தையே நாயகி சுவாமிகள், மரண காலத்தில் ஏற்படும் அவஸ்தைகளை மிக நன்றாக விளக்கிக் காட்டி அதற்கு முன் பகவானின் திருவடிகளை நினையுங்கள் என்று அழகாக எடுத்துக் கூறுகிறார்

''கா3ம் ஜா மெநை ராண் ஆவ் மெநை நா த்யேவேள்
காம் காய் சலயி மொந்நு
கான் ஜ:கை தொளொ பி2ரை மான் து4ளைனா த்யேவேள்
காம் காய் சலயி மொந்நு
ஸான் முஸ்னா அவஸ்தாநவன் முல்லாம் தூ
நா:ன் ஜாநிரே மொந்நு, மொந்நுரே மொந்நு
ஹாதுன் ஸெர தீ3 பாயிந் பொடை3நா த்யேவேள்
ஆஸெ காய் ஹோய்ரே மொந்நு
பீ4துர் வொர்க்க33ன் வேள் அவ்னா முல்லாம் தூ
ப்3ரம்ஹ த்4யாந் காரி மொந்நு மொந்நுரே மொந்நு
அஸ்கி விஸ்ரை தொ3ளொ மிஸ்குனா ஜாஸ்தெவேள்
ஆஸ்த காய் ஹோய்ரே மொந்நு
நெஸ்கி மரன் யெமுட்3 அவ்நா முல்லாம் தூ
அஸ்கி ஜாநிரே மொந்நு மொந்நுரே மொந்நு ''

வீடு போ போ காடு வா வா என்னும் உன் வயோதிகப் பருவத்தில் உன் வேலைகள் எது தான் நடக்கும்? மனமே. அந்திம காலத்தில் காதுகள் எதையும் கேட்க முடியாதபடி அடைத்துக் கொள்ளும்,கண்கள் சக்கரம் போன்று சுழலும் கழுத்து நேராக நிற்காமல் தொங்கிப் போகும். அப்படிப்பட்ட வேளை வருமுன்பு அணுவிற்குள் அணுவாய் நிற்கும் பரம் பொருளை நீ அறிந்து கொள். உன் கைகளோடு கால்களும் சேர்ந்து செயல்படாமல் இருக்கும் அந்தக் காலத்தில் உன் ஆசையெல்லாம் என்னவாகும் சொல் மனமே! உயிர் பிரிந்த உன் உடலை திண்ணையில் சுவற்றில் சாய்த்து வைக்கு முன்னர் பிரம்ம தியானத்தைச் செய் மனமே! எல்லாமே மறந்து போகும், கண்களும் நிலைகுத்தி நின்றுவிடும் அப்போது மனமே! உன் ஆசையெல்லாம் என்னவாகும்? அதனால் உன் கழுத்தை நெறித்து எமன் உயிர் கொண்டுபோகும் முன் இறை தத்துவத்தை அறிந்து கொள் மனமே! என்கிறார்

அசுரன் இரண்யகசிபு பூமியைப் பாயாகச் சுருட்டி பாதாளத்திற்கு கொண்டு சென்றான். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க உலகத்து உயிர்களை யெல்லாம் காக்க வேண்டும் என்னும் பெருங் கருணையுடன் ஸ்ரீமந் நாராயணன் வராக அவதாரம் எடுத்து பூவுலகைக் காத்தருளினார். அச்சமயம் பூமா தேவியின் வேண்டு கோளின்படி உலகத்தவர் உய்யும் பொருட்டு

'' ஸ்திதே மநஸி ஸ§ஸ்வஸ்தே சரீரே ஸதியோ நர:
தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் ''

'மனமும், சரீரமும் தளர்ச்சியடையாமல், வாத, பித்த, சீதள நாடிகள் சம நிலையில் இருக்கும் போது எவன் ஒருவன் எங்கும் நிறைந்துள்ளவனும், என்றும் பிறப்பும், இறப்பும் இல்லாதவனாகிய என்னைச் சிந்திப்பானேயாகில் அப்படிப் பட்டவன், தன் மரண காலத்தில் என்னை நினைக்க முடியாத நிலையில் இருந்தாலும் அவன் ஏற்கனவே என்னிடம் பக்தி கொண்டிருந்தவன் என்னும் காரணத்தினால் அவனுடைய, மரணத் தருவாயில் அவனிடம் திருவுள்ளம் கொண்டு மோட்சத்தை அளிக்கிறேன்' என்று உறுதி அளித்தார்.பகவானே உறுதி கூறுகிறார் என்றால் அது நிச்சயம் நடக்கும் என்பதில் தீவிர நம்பிக்கைக் கொண்ட நாயகி சுவாமிகள்

'' ஸிந்நாஸ்த நமம் கரெத்
மொந் நாஸ்தெ பதமப்பை
சென்னோ அட்குல் ஹொவுங்கொ
எமாகு தெ2ப்போ
ஸொன்னா ஸவ்லானு ஹெள்ளி
பொன்னா ஜா:ட் ஹிங்கெ ரஜ
மன்னாருக் மொந்நு தோ<2வி
மொந்நு சொக்கட் --துமி

'' சலிக்காமல் சதா இறைவன் நாமத்தைச் சொல்லிக்கொண்டிருந் தால் இவ்வுலகில் பிறந்திறவாத பதத்தை அளிப்பான் இறைவன். எமனுக்கு ஆளாகாதீர்கள். முன்பு கோபியர்களின் சேலைகளை கவர்ந்து சென்ற ராஜ மன்னாரிடம் நல்ல மனம் வைத்து நீங்கள் நாமத்தைச் சொல்லுங்கள் ''

மேலும் இறைவன் நாமங்களை எப்போது சொல்ல வேண்டும் என்பதையும் மிக அழகாக, யாக்கை நிலையாமையை பற்பல பாடல்களில் திரும்பத் திரும்ப கூறி மக்களுக்கு அறிவறுத்து கிறார் ஸ்ரீ நாயகி சுவாமிகள்.

''ஹரி மெனொபா3 ஹரி மெனொரே
ஹரி மெனெத் பாப் தா4ம் தெ4ரி 4மய்ரே
ஜியெ தி3ந்நு ஜான்த3க் ரி:யெதி3ந்நு அத்தோதி

ஹரியின் நாமத்தைச் சொல்லுங்கள், ஹரி என்று சொல்லுங்கள் அப்படி ஹரி என்று சொன்னால் பாபங்கள் ஒரே ஓட்டமாக ஓடி விடும். கடந்து சென்ற நாட்களைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம் இன்றையிலிருந்தாவது, இப்பொழுதாவது நாமங் களைக் கூறுங்கள் மேலும்

'' தா3துன் அஸ்கி லல்னாஸ்திக்காம்
தா3ர் தொங்கர் கெல்லி தடுனாஸ்திக்காம்
பீ4த் தெ4ல்லிகின் சல்னாஸ்திக்காம்
தளம் நீ:ஸ்தக் தெ3வ்ரொ ஹொய் நசுனாஸ்திக்காம்
தூ4ம் லயெ ஸரீர் து4ள்னாஸ்திக்காம்
பு4த்தி3 பெ4ண்டு ஹொய் த4மி ஜானாஸ்திக்காம்
நெத்தி3 ஜெய் கெட்டொத3டி பி3ஸுனாஸ்திக்காம்
ஜொமைன் த3ணி ஹிங்குனாஸ்திக்காம் ''

பற்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்வதற்கு முன்,படிகட்டுக் களை மலைபோல் தோன்றி கடப்பதற்குள், தடுமாறி விழாமல் இருக்க சுவற்றைப் பற்றி நடப்பதற்கு முன்,தட்டு தடுமாறி நடக்கும் கிழவன் (கிழவி) ஆவதற்கு முன் இறைவன் நாமத்தைக் கூறுங்கள், சிதையில் ஏற்றும் உடல் வீழ்வதற்கு முன், நல் நிலையில் இருந்த புத்தி வயதானவுடன் ஆட்டுப் புத்தி போன்று ஆவதற்கு முன், இடுகாட்டிற்கு கொண்டு செல்வதற்கு முன்,மருமகன்கள் செய்யும்இறுதி ஊர்வலம் நடப்பதற்கு முன் ஹரி, ஹரி என்று சொல்லுங்கள் என்று அறிவுறுத்துகிறார்

பகவந்நாமங்களைச் சொல்லுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் யாவை ? என்னென்ன நன்மைகளைத் தரவல்லது என்பதை ஆழ்வார்களிலே காலத்தால் பிற்பட்டவரான திருமங்கையாழ்வார்

'' குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும் நீள் விசும்பருளும், அருளொடு பெரு நிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந் தந்திடும், பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம் ''

என்கிறார், மேலும் பொய்கையாழ்வார்

''வினையால் அடர்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக் கதிக்கண் செல்லார்--நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம் பேர்ச் செங்கண்
கரியானைக் கைதொழுதக் கால் ''

அதாவது நினைப்பதற்கு அரிய சேயானை, ஓராயிரம் நாமங்கள் உடையவனும், செம்மையான கண்களையும்,மேகநிறமுடைய திருமாலின் திரு நாமங்களைக் கூறி வணங்குபவர்கள் இருவினைத் துன்பங்களுக்கு ஆளாகமாட்டார்கள். வெம்மையான கொடிய நரகை அடையமாட்டார்கள். தினையளவேனும் தீமையின் வழியில் செல்லார் என்று கூறுகிறார். திருமழிசை பிரானும் தம் திருச்சந்த விருத்தத்தில்

''அறிந்து அறிந்து வாமனன் அடியினை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெண்திரையுள் மன்னுமாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்த தீவினைகள் பற்று அறுதல் பான்மையே ''

வாமன பகவானின் திருவடிகளே உபாயமும், உறுதிப் பொருளும் என்று அறிந்து வணங்கி துதித்தால் ஆத்ம ஞானமும் பக்திச் செல்வமும் சேரும். பரந்த அலைகளையுடைய பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலைத் துதித்தால், ஆத்மாவின் பாவங்கள் வாசனை உட்படத் தொலைந்து பற்று நீங்கும். என்கிறார்

''தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசு ஆகும் செப்பு -- ஏலோர் எம்பாவாய் '

என்று ஆண்டாள் நாச்சியாரும் கூறியுள்ளார்.

குலசேகர ஆழ்வார் தம் முகுந்த மாலையில்

'''ஸத்ருச் சேதைக மந்த்ரம் ஸகல முபநிஷத் வாக்ய ஸம் பூஜ்ய மந்த்ரம்
ஸம்ஸாரோத்தார மந்த்ரம் ஸமுபசித தமஸ் ஸங்க நிர்யாண மந்த்ரம்
சர்வைஸ் வர்யைக மந்த்ரம் வ்யசன புஜக சந்தஷ்ட சந்த்ராண மந்த்ரம்
ஜிஹ்வே ஸ்ரீ கிருஷ்ண மந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜன்ம சாபல்ய மந்த்ரம் ''

நாவே! பகைவர்களை அழிப்பதாயும் , எல்லா நன்மைகளையும், தரவல்லதாயும், உபநிஷத்துக்களால் போற்றப் படுவதாயும் ,சம்சாரம் என்னும் கடலிலிருந்து கரையேற்றுவதாயும்,அறியாமையைப் போக்கு வதாயும், எல்லாச் செல்வங்களையும் தருவதாயும், துக்கம் என்னும் விஷத்திலிருந்து காப்பாற்றுவதாயும், பிறவிப் பயனை தரவல்லதாயும் உள்ளது ஸ்ரீ கிருஷ்ண மந்த்ரம். எனவே அம் மந்த்ரத்தை எப்பொழுதும் இடைவிடாமல் நினைப்பாயாக என்று கூறுகிறார்.

மேற்கண்ட ஆழ்வார்களைப் போன்றே

'ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா மீ ஸெஜ்ஜெ கெ4ர்கெரி நா:
தொர கொ4ம்மாதெனோஸ் மீ ஸெய்லே
ஸெய்லே ஸிள்ள தொ3ளொஹோர் மொகொ ஸெய்லே '

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா! நான் அடுத்த வீட்டுக்காரி அல்ல. உன் வீட்டுக் காரியே தான். உன் குளிர்ந்த பார்வையினால் என்னை கடாக்ஷ¤த்து அருள்வாய் என்று நாயகி பாவத்தோடு அனவரதமும் திருமாலைத் துதித்த ஸ்ரீ நாயகி சுவாமிகள்

''ஸெங்கொ3ரெ:ய் பாலந கரொயி ஸ்ரீரங்க3 நமமு
ஸெங்கொ3ரெ:ய் பாலந கரொயி
பாபுநஸ்கி ரா:நா த4மயி மொர பா3பு நமம் ஹால்
பாபுநஸ்கி ராநா த4மயி ''

தோன்றாத் துணைவனாக இருந்து பரிபாலிக்கும் நாமம் ஸ்ரீரெங்க நாமம். என்னப்பன் திருமாலின் நாமங்களை ஓதினால் செய்த பாபங்கள் அனைத்தும் நில்லாது ஓடிவிடும் என்கிறார்

''ஹரிக் பி4த்தரும் கௌ3லே மோட்சி ஹாதும் ஸே ஜல்லே''  ஹரியை எப்போதும் உன் மனதிலே பாடு. உன் உள்ளங்கையிலேயே மோட்சம் உள்ளது என அறிவாய்.

' நடனகோ3பால் நமம் படன கரோ --ஏ
நரகு பா43 ஸொடி ஜவாய் ஜவாய் '

நடனகோபால் நாமத்தைப் படனம் செய் நரக உபாதையினின்று விடுபடுவாய்.

'' மொந்நு பா3ரே ஹரி மெந்நொபா3ரே - ஏ
ஸொந்நா ஜிவ்நமூஸ் தூ கர்நொ பா3ரே - தொர
ஜுந்ந கு3ண்ணுநஸ்கி ஜேடொ3ய் பா3ரே - தெ2ப்பொ3
பொந்நா ஜா2ட்32ளெஸ்தெனொ அவ்ட3ய்பா3ரே '

ஏ மனமே! நீ எப்போதும் ஹரி நாமங்களைச் சொல். இப்படிப்பட்ட உன்னதமான வாழ்க்கை தான் வாழ வேண்டும், அப்படிச் செய்தால் உன்னுடைய பழைய தீய குணங்கள் உன்னை விட்டு ஓடும். அப்போது புன்னை மரம் ஏறி விளையாடிய ஸ்ரீ கிருஷ்ணன் உன்னைத் தேடி வருவான் என்றும்

' வள்ளல் வாஸு தேவ நாமம்
தெள்ளமிர்தம் உள்ளே கொண்டால்
கொள்ளைக் காரன் வர மாட்டான் வந்தாலும்
கொள்ளைக்கிடமில்லாமல் போவான் '

(இங்கே யமனை கொள்ளைக்காரன் எனக்கொள்ளவேண்டும்) இவ்வாறெல்லாம் இறைவன் திரு நாமங்களின் மகிமைகளைக் கூறி அதன் பயன்களைப் பெறுங்கள் என கூறுகிறார்.

பற்பல மதங்களில் புகுந்து, ஆராய்ந்தும் பரம் பொருள் இன்னது என்று அறியாது, பின் சிவ வாக்கியர் என்னும் நாமம் பெற்று சைவராக இருந்தார் திருமழிசை ஆழ்வார். பின் பேயாழ்வாரால் திருத்தி பணி கொள்ளப் பெற்று தீவீர வைணவரானார். ஸ்ரீமந் நாராயண பரத்துவத்தை நிறுவுவதில் வெற்றி கண்டார். சிவனுக்கும், நான்முகனுக்கும் தெய்வமான ஸ்ரீமந் நாராயணனே உலக காரணனும் காப்பவனும் ஆன முழுமுதல் கடவுள் என்பதே இவ்வாழ்வாரின் முடிவாகும். நான்முகன் திருவந்தாதியில்

'' இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம் பெருமான் உன்னை -- இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற் கிரிசை
நாரணன் நீ நன்கறிந்தேன் நான் ''

இந்நூலின் கடைசி பாசுரமான இதுவே, மற்றைய பாசுரங்களின் முடிந்த முடிவாகும். இவ்வாழ்வார் ஒரு பாடலில்

''திறம்பேன்மின் கண்டீர், திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தர் - இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவி செவிக்கு ''

அதாவது யமன் தன் பணியாளர்களை அழைத்து, அவர்கள் செவியில் தூதர்களே!என் ஆணையைத் தவற வேண்டாம். திருமாலின் திருநாமத்தை மறந்து விட்டாலும், மற்ற தெய்வங்களை வழிபடாத வரைக் கண்டால்! நீங்கள் வணங்கி அவர்களை விட்டுவிடுங்கள். கொடுமையைத் தவிர்த்துச் சாதுக்களாய் விலகுங்கள் என்று கூறினான்.

மேலே குறிப்பிட்டுள்ள ஆழ்வாரைப் போன்றே நம் நாயகி சுவாமிகளும் முதலில் திருப்பரங் குன்றத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் தவமிருந்தார். ஸ்ரீ முருகப் பெருமானின் அருளாணையின்படி பரமகுடியில் நாகலிங்க அடிகளாரிடம் அஷ்டாங்க யோகம் பயின்று 'சதானந்த சித்தர் ' என்ற நாமம் பெற்றார். பின்னர்தல யாத்திரையின் போது ஆழ்வார் திருநகரியில் வடபத்ர அரையரிடம் உபதேசம் பெற்று திருமால் பக்தராகி சதானந்த சித்தராக இருந்த சுவாமிகள் நடன கோபால நாயகி என்ற தாஸ்ய நாமம் பெற்று தீவிர வைணவரானார். தம் ஸெளராஷ்ட்ர கீர்த்தனை ஒன்றில்

'' எமகிங்கருநு ஸெய் எமராட் தெ2ப்போ3
ஏதா4நுக் வசிரேஸைகோ
ஹரி நமோ நாராயணா மெனி க3வ்னாருக் தெ3க்கேத்
ஸொம்மர் பகு3ல்3 தெ2வ்னாஸ்தக் ஸொட்டி3 அவ்டு3வோ மென்ரேஸ் ''

'ஹரி நமோ நாராயணா என்று பாடுபவர்களைக் கண்டால்,முன்னால் கால் வைக்காமல் அவர்களை விட்டு வந்து விடுங்கள் என்று எமதர்ம ராஜன் தன் தூதுவர்களைப் பார்த்து இவ்வாறு கூறியிருக்கிறார் கேளுங்கள் ' என்று எடுத்துக் காட்டியுள்ளார்.

குலசேகர ஆழ்வார் தம் பெருமாள் திருமொழியில்

''ஊன் ஏறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன் ''

''ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வான் ஆளும் செல்வமும் அரசும் யான் வேண்டேன் ''

''வான் ஆளும் மா மதிபோல் வெண் குடைக் கீழ் மன்னவர் தம்
கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செலவு அறியேன் ''

என்றெல்லாம் கூறும் ஆழ்வார், திரு வேங்கட மலையில் நாரையாக, சுனையிலுள்ள மீனாக, வனத்தில் செண்பக மரமாக, பயனற்ற புதராக, திருவேங்கட மலையின் சிகரமாக, ஒரு காட்டாறாக அடியார்களின் பாத தூளிபடும் பாதையாக, உள் கோயில் வாசலில் அடியார்களும், தேவர்களும், அரம்பையரும் கூடி நடந்து ஏறும் படியாகக் கிடந்து உன் பவள வாயைக் காண்பேன் என்றெல்லாம் கூறுகிறார்.இறுதியில் செம்பவள வாயன் திருவேங்கடம் என்னும் எம் பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே, என்கிறார்

ஆனால் நாயகி சுவாமிகள் தம் ஸெளராஷ்ட்ர, மற்றும் தமிழ் பாடல் களில் தனக்கு இனிமேல் பிறவியே வேண்டாம் என்று வேண்டுகிறார்.

''எகப2ல்ல மொகொ ஜெலும் நொக்கொ நொக்கொ தொக்கொ
எகஹால் நஸயிதொர் கொ2கொ ஹரி ஹரி ''

இனிமேலும் எனக்கு பிறவி வேண்டாம் வேண்டாம் வேண்டாம். பிறவியினால் உன் மேல் உள்ள கவனம் நாசப்பட்டுப் போகும் ஹரி, ஹரி என்கிறார். மற்றொரு பாடலில்

''கித்க தூ ராகல்யேதிந்நு ஸொண்ணா மீ கிர்ப ஸாயேட்
அத்தெங்கு3ட் ஜெலும் க2ண்ணா மீ''

நீ எவ்வளவுதான் கோபப் பட்டாலும் உன்னை நான் விடமாட்டேன். கருணை செய், இனிமேல் நான் பிறவி எடுக்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறுகிறார். மேலும் ஒகு நாமாவளியில்

''பொன்னா ஜா:ட் தே3வுகு மீ
ஸொண்ணா ஸொண்ணா ஐகோ
மொர்நாவ் நடனகோ3பால நாயகி
மொகொ ஜெலும் ஜுண்ணா ஜுண்ணா ''

புன்னை மரமேறிய தெய்வத்தை நான் விடமாட்டேன், என் பெயர் நடனகோபால நாயகி, இனி எனக்கு பிறவி கிடையாது, கிடையாது என்று அறு தியிட்டு உறுதியாக கூறுகிறார். மேலும்

ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டு வேண்டியவர்களுக்கு வேண்டிய அருள் கொடுக்கும் ஸ்ரீரெங்கநாதப் பெருமானேயே, நியாயம் கேட்டு நீதிமன்றத் திற்கு அழைக்கும் மிக அருமையான ஸெளராஷ்ட்ர மொழி நாமாவளியில்

'' ஸங்கி3ரே ஸங்கி3ரே ரங்கா --மொகொ
அங்கு3னு ஜெலும் தெ3வன் ஹட்வில்ரி:யெஸ்கி காய்
அத்த தொர் நியாவ் அத்த மொர் நியாவ்
அத்த தொர் நியாவ் மொர்நியாவ் ரஜ
மன்னார் ஜொவள் ஸங்கி3ஜெ சால்
அத்த தொர்நியாவ் மொர்நியாவ் ரஜ
மன்னார் ஜொவள் ஸங்கி3ஜெ சால் சால்
அத்த தொர்நியாவ் மொர்நியாவ் ரஜ
மன்னார் ஜொவள் ஸங்கி3ஜெ சால் சால் சால்
ஹ¨ட் ஹ¨ட் ஹ¨ட்
தெ4ருமூஸ் வாட் வாட் வாட்
கருமுநு காட் காட் காட்
மர்முநு போ2ட்3 போ2ட்3 போ2ட்3
மொரநுஜ்வாவ் ஹேட்3 ஹேட்3 ஹேட்3
பரம்பத3ம் கோட் கோட் கோட்
பொ3ல்ஜெய் ஸோட்3 ஸோட்3 ஸோட்3

ஸங்கி3ரே ஸங்கி3ரே ரெங்கா3
யெங்கு3ட் தெங்கு3ட் ரி:யெ தூ
ஹிங்கி3ரெ ஹிங்கி3ரெ ரெங்க3

வடஸேமென் மொகொ ஸங்கி3ரெ ஸங்கி3ரெ ரெ3ங்கா
நடனகோ3பால் நாயகின் நாவ்
மொகொ ஸங்கி3ரெ ஸங்கி3ரெ ரெங்கா3 ''

'சொல்லுடா ரங்கா சொல்,நீ இன்னமும் எனக்கு ஜன்மம் (பிறப்பு) தர நினைத்திருக்கிறாயா ? ரங்கமன்னாராகிய உன் நியாயத்தையும் என் நியாயத்தையும், ராஜ மன்னாரிடம் சென்று முறையிடுவோம். எழுந்திரு, எழுந்திரு, உன்னை அடைய தருமமே வழி, உன்னையடைய தடையாயிருக்கும் கர்மத்தை அறுத்தெறி. உன் மனதில் இருக்கும் மர்மத்தை உடைத்தெறி. பிறப்பிறப்பை எடுத்தெறி. பரமபதம் எங்கே? எங்கே? அங்கே என்னைக் கொண்டுபோய் விடு. இப்படியெல்லாம் செய்யாமல் எனக்கு பிறவி கொடுக்க எண்ணுகிறாயா? சொல் ரெங்கா சொல். எங்கும் பரிபூரணமாக வியாபித்திருக்கும் நீ இப்போது நீதிமன்ற சாட்சி கூண்டில் ஏறு ஏறு, ராஜமன்னார் நியாயம் சொல்லட்டும், நான் உன் நாயகி என்று சொல் சொல் ' என்று பெருமாளையே நீதிமன்றத்திற்கு அழைக்கும் பாடல் மிக அருமை யானதும் அதிசயமானதும் தான்

''பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருகாப்பு
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவார் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே ''

என்று இறைவனுக்கே பல்லாண்டு பாடி துதித்த விஷ்ணு சித்தர் என்று அழைக்கப்படுபவரும்,பூமா தேவியாகிய ஆண்டாளுக்கு தந்தையாராக பெருமை பெற்றவருமான பெரியாழ்வாரைப் போல் கண்ணனைக் குழந்தையாக பாவித்து பாரங்களை பாடிய ஆழ்வார்கள் வேறு எவருமே இல்லை எனலாம். தம் திருமொழியில் கண்ணனின் திருமேனி அழகை ரசிக்கின்றார். இன்னின்னார் இன்னின்ன பொருள்களைக் கொண்டு வந்துள்ளனர் என்றெல்லாம் கூறி தாலாட்டுகிறார். கண்ணனோடு விளையாட சந்திரனை அழைக்கிறார். செங்கீரை ஆட அழைக்கிறார். கைகளால் சப்பாணி கொட்டுக என்று வேண்டுகிறார். திருவடி சதங்கைகள் உரசி ஓசை எழுப்ப,அரையில் கட்டிய மணி ஒலிக்க தன் இணைத்திருவடிகளால் தளர் நடை நடந்து வர வேண்டுமென்கிறார். தங்க அரைச் சதங்கை பாத சதங்கை நெற்றிச் சுட்டி ஆகியவை அணிந்து சதங்கை ஒலி சலன் சலன் எனக் கேட்க, மின்னலுடன் மேகம் முழங்கி வருவது போல ஓடி வந்து தன்னை அணைத்துக் கொள் எம் பெருமானே, கண்ணா என்று வேண்டுகிறார். கண்ணன் அழகாக நடந்து வந்து தன் முதுகை தழுவி கொள்கிறான் என்றும், பூச்சிக்காட்டி விளையாடுகிறான் என்றும் கூறி, தன்னை எசோதையாக பாவித்து, தன்னிடம் தாய்பால் அருந்த வரவேண்டும் என்று அழைக்கிறார். இவ்வாறு பாடிக் கொண்டே வந்த ஆழ்வார் கண்ணனுக்கு கண்ணெச்சில் படாதவாறு காப்பிட அழைக்கிறார். தான் தாயாக மாறி கண்ணனைக் குழந்தையாக பாவித்து பாடிய பாசுரங்கள் அற்¢புதமானவை.

ஸ்ரீ நாயகி சுவாமிகள் பெரியாழ்வாரைப்போல அதிகம் பாடவில்லை என்றாலும் தாய்மை உணர்வோடு பாடிய சில நாமாவளிகள் உள்ளன.

''ஸிகாம் லொநி சொரி அகாஸ்ஸெய்
தோணும் தைலியே
தே3வகி பெ3டா ஆவி --வஸூ
தே3வுகு பெ3டா ஆவி ''

உறியிலுள்ள வெண்ணெய் திருடி ஆகாயத்தை நோக்கி வாயில் போட்டுக் உறியிலுள்ள வெண்ணெய் திருடி ஆகாயத்தை நோக்கி வாயில் போட்டுக் , வஸு தேவரின் மைந்தனே வருக.

''யேலா தேலா கோ3பாலா
ஜாலமு கர்னொகொ கோ3பாலா
ஜிலேபி3 தெவுஸ் கோ3பாலா
பாலி மொகொ கோ3பாலா''

இங்கேயும், அங்கேயும் இருந்து கொண்டு என்னருகில் வராமல் கோபாலா, ஜாலங்கள் செய்யாதே கோபாலா,உனக்கு ஜிலேபி சாப்பிட தருவேன், எனக்கு அருள் செய்ய வேண்டும் கோபாலா என்றும்,

''சொட்3டா3 நுமஸ்கி செடா3வ்
சொட்3டொ3 ஹொய் லொனி சொரி
2யெ அப்ரஞ்ஜி கெ3ட்3டா3 ஆவி தொக
ஸொட்3டு3கி மீ மொர அப்ரஞ்ஜி கெ3ட்3டா3 ஆவி ''

'திருடர்களிளெல்லாம் சிறந்த திருடனான நீ, வெண்ணெய் திருடி தின்ற என் தங்கக் கட்டியே வா. உன்னை விட்டுவிடுவேனோ நான் என்னுடைய தங்கக் கட்டியே வா '

மேலும் சில தமிழ்ப் பாடல்களில் 'எங்களை விட்டுப் பிரிந்த கோபாலன் பசியுடன் எவ்விடம் இருக்கிறானோ! கட்டித் தயிரும்,சட்டி நிறைய கற்கண்டு,சக்கரையும் கண்ணன் பசியாற கொடுக்கும்படியும், கண்ணேறு படும்படி எங்கெங்கே செல்கிறானோ என்று பொங்கும் தாயன்போடு நாயகி பாவத்தில் தன் தோழியிடம் கூறுகிறார்.

பெரியாழ்வார் தம் திருமொழியில் கண்ணனின் பிள்ளை விளையாட்டை செய்யும் தீம்புகளை பொறுக்க மாட்டாமல் ஆய்ச்சியர்கள் முறையிடுவதை வெகு ஆழகாக சித்தரிக்கிறார்

''வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை
வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்கும்,
கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்
காக்க கில்லோம், உன் மகனைக் காவாய்,
புண்ணிற் புளி பெய்தால் ஒக்கும் தீமை
புரை புரையாய் இவை செய்ய வல்ல
அண்ணற் கண்ணன் ஓர் மகனைப் பெற்ற
அசோதை நங்காய்! உன் மகனைக் கூவாய் ''

'புண்ணில் புளியை விட்டாற் போலத் தீம்புகளைக் கண்ணன் வீடுதோறும் செய்கிறான். அண்ணன் பல ராமனுக்கும் ஒப்பில்லை. இவன் வெண்ணெய்யை விழுங்கி விட்டுப் பானைகளைக் கல்லில் போட்டு உடைக்கும் ஒலி கேட்கிறது. இந்த மகனைப் பெற்ற எசோதை நங்கையே! எங்களால் அவன் கற்ற குறும்பைக் காக்க, இயலாததால் உன் பிள்ளையை அழைத்துக் கொள்' என்று ஆய்ச்சியர் முறையிட்டனர்.

எசோதையும் கண்ணனிடம்

''போதர் கண்டாய், இங்கே போதர் கண்டாய்
போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏ தேனும் சொல்லி அசலகத்தார்
ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோதுகலம் உடைக் குட்டனே யோ !
குன்று எடுத்தாய் ! குடம் ஆடு கூத்தா !
வேதப் பொருளே ! என் வேங்கடா !
வித்தகனே! இங்கே போதராயே ''

குதூகலம் உடைய பிள்ளையே! மலையைத் தூக்கியவனே!குடக் கூத்து ஆடிய வேதப் பொருளே! திருவேங்கட மலை வித்தகா! வரமாட்டேன் என்று கூறாமல் இங்கே விரைந்து வா. என்னால் அயலார் கூறும் குறைகளைப் பொறுக்க முடியவில்லை. ஆதலால் நீ இங்கே வா என்றாள் எசோதை.

எசோதையிடம் ஆச்சியர் கண்ணனைப் பற்றி புகார் செய்வதை ஆழ்வார் பாடியுள்ளார். ஆனால் நாயகி சுவாமிகள், தம்மையே கண்ணனாக பாவித்து, கோபியர்களைப் பற்றி, தம் தாயாராகிய எசோதையிடம் புகார் செய்யும் பாடலைப் பாடியுள்ளார். பக்திமான்கள் வரிசையில் உயர்ந்த இடத்தில் விளங்கும் நாயகி சுவாமிகள் பாடியுள்ள இந்தப் பாடல்

நாடகம் போன்று நம் கண் முன் தோற்றுவிக்கும் படியாக உள்ளது. கோபியர்களின் வீடுகள் தோறும் சென்று வெண்ணெயைத் திருடி பானைகளை உடைத்து சாமர்த்தியமாக தப்பிக்கும் கண்ணனை கையும் களவுமாக பிடிக்க வருகிறார்கள். மாயக் கண்ணன் எசோதையிடம் வந்து அவள் மடியில் ஒட்டிக் கொள்கிறான். தன் தாயிடம், 'நான் நல்லவன் இவர்கள் (கோபியர்கள்) பொய்யாக கூறுகின்ற வார்த்தைகளை நம்பாதே. அவர்களை புத்தி சொல்லி அனுப்பு என்று பயந்தவன் போல கொஞ்சு- கிறான். கெஞ்சுகிறான். கோபியர்கள் கூறுவது அனைத்தும் பொய்யே' என்று கூறுகிறான். இனி கண்ணனின் வாதத்தைப் பார்ப்போம்.

''நீ:ஸ்தெ வத்தான் கம்சிலவ்ராஸ்வோ
அம்பொ3 மொகொ
கா2ஸ்தக் லொநி தூ தே3ரேஸ்தெமொ
உன்னகாய் ஸேவோ --(கோ3பிந்)

லொநி மொகயேட3ப்பு3நாகி -- ஸொந்நா பாத்ராமு
தூ தே3ஸ்தே லொநி கா2ஸ்தக் புந்நாகி
கெ2நி ஏ தூ ஐகி ஜந்நகி -- காய்மெனி மீ ஸங்கு3
மொர் பாபு3 ஸொத்து உந்நகி -- கோ3பிந்

அம்மா! இந்த கோபியர்கள் இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக் கட்டிக் கொண்டு உன்னிடம் முறையிட வந்திருக்கிறார்கள். நான் உண்பதற்காக வெண்ணெயை நீ கொடுப்பதில் குறைவா இருக்கிறது ? நீதங்கப் பாத்திரத்தில் வைத்துக் கொடுக்கும் வெண்ணெயை நான் உண்பதற்குப் போதாதா ? இப்படி இருக்க நான் வெண்ணெய் திருடுகிறேன் என்று கதை கட்டிக் கொண்டு வந்து முறையிடுகின்றனர். நான் என்னவென்று சொல்வேன். என் தகப்பனாரின் சொத்துக் கென்ன குறை ? இவர்கள் வீட்டில் நான் திருடுவதற்கு ?

''உஞ்ச ஸிகான் மொகொ அந்தா3ய்கி --யெநு
கம்சிலவ்ரி:யெ வத்தானத்த நிஜம் பொந்தை3கி
தெ3ஞ்சு மொகொ யெங்கொ3ல்லோ ஸேகி --ராத்
மொஞ்சுமு மொக தூ ப4ராட் த4ட்33ஸ்தெ ஸேகி --கோ3பிந்

3தா3க் களாநாஸ்தெ காம் ஸேகி --புஸிலெவ மாய்
33மோ ஸொடி3 யோக்கெ4டி3 ராஸ்தேதி ஸேகி --யெங்க
அதா3வ் நீ:ஸ்தெ வத்தாம் காய் ஸேகி --யெநு
ஸதா3 யிஸொ மொர் ஹோர் மெல்லேத் ரா:ஸ்தெ கொகா:ல்கி -- கோ3பிந்''

இவர்களுடைய வீட்டில் உயரத்தில் கட்டி வைத்திருக்கின்ற உறி சிறுவனான எனக்கு எட்டுமா ? இவர்கள் சொல்வதில் கொஞ்சமாவது உண்மை இருக்கிறதா ? கோபியர்கள் மேல் எனக்கு என்ன பகை இருக்கிறது ?சொல்லுங்கள் இரவில் பனியில் என்னை நீ வெளியில் அனுப்புவதுண்டா ?

என் அண்ணன் பலராமனுக்கு தெரியாத காரியம் உண்டா ? அவன் என்னை விட்டு கண நேரமாவது பிரிந்திருக்கிறானா ? அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள். ஆதாரம் இல்லாமல் குறை கூறும் கோபியர்கள் என்மேல் எந்நேரமும் இவ்வாறு செய்வது எதனாலோ ?

''ஜிவ்னம் நஸஸ்தெநொ மீ ஹாவோ -- யேட் கா2ஸ்தெ
2வ்ணமு தூ தேநாரீ:ஸ் தென ஹாவோ -- அத்த
மவ்னங்க ரா:ஸ்தேஸ் சொக்கட் வோ -- மொகொ
பொ3வ்நொ மெல்லி யளிநுயிஸொ பொ3ள்வறாஸ்தெவோ -கோ3பிந்

சொட்3டோ3 காமுந் மீ கோட் ஸிக்கெஸ்வோ தொஜ்ஜொவள்
சொட்3டொ3 வத்தான் கர்லேதவ்ராஸ் சொட்3டி3 நெநுவோ
கெ4ட்டெ4ய் லொநி தூப் யேட் நீ:ஹாவோ மொகொ
யெநு - அட்3ட நீ:ஸ்த மொவஸ்தெநு அஸ்க சொட்3டி3ன்வோ -- கோ3பிந் ''

கோபியரின் குடியைக் கெடுப்பவனா நான் ? நீ எனக்கு கொடுக்கின்ற திண்பண்டங்கள் குறைவா என்ன ?இப்போது இவர்கள் கூறுவதையெல்லாம் கேட்டு மௌனமாக இருப்பதே நல்லது. என்னை அழைக்க வேண்டுமென்றே இவர்கள் இவ்வாறு சொல்லுகிறார்கள் திருடுவதற்கு நான் எங்கே கற்றுக் கொண்டேன் ? உன்னிடம் பொய் கூறும் இவர்கள் தான் திருடிகள். கட்டித் தயிர்,வெண்ணெய், நெய் நம் வீட்டில் இல்லையா என்ன ? கோபியர்கள் புளுகுவதில் படியில்லாமல் அளக்கின்ற முழு திருடிகள்.

''ப4ந்திலவ்ரெ வத்தான் ஸெய்லெவோ - ராதிம் அம்
தார் ஸொடி3 மீ ஹந்தா3ரும் ஜாஸ்தெ ஸேஹாவோ
கோ3விந்த3 ஜந்த மீ கை ஜந்நாவோ - பெ4ளி
நந்தி3ரி:யாஸ் யெங்க தூ பு3த்தி4 ஸங்கி34த்டே3வோ கோ3பிந்

வடிதே3 ஹளது மெநியாஸ்வோ - சொக்கட்
வாக் வசிலேத் அஸிலேத் வடி லவநவியாஸ்வோ
ஹுடி யவேத் பஸ்கட3வியாஸ்வோ -- ஸ்ரீ
நடன கோ3பால் மெநி பொ3வியாஸ் நியாவ் ஐகிலேவோ ழகோ3பிந் ''

இட்டிக் கட்டிக் கொண்டு வந்திருக்கின்ற வார்த்தைகள் உண்மையல்ல. இரவில் இருட்டில் நான் வீட்டை விட்டு போயிருக்கிறேனா ? கோவிந்தன் அறிய எனக்கு ஒன்றும் தெரியாது. இவர்களுக்கு நல்ல புத்தி சொல்லி அனுப்பு அம்மா! என்னிடத்தில் வந்து மஞ்சள் அரைத்துக் கொடு என்றார்கள். நன்றாக பேசி, சிரித்துக் கொண்டே எனக்கு மஞ்சள் பூச வந்தார்கள். நான் பேசாமல் எழுந்து வந்து விட்டேன். ஆனால்,இவர்கள் என் பின்னாலேயே வந்து நடனகோபால என்று அழைத்துக் கொண்டு வந்தவர்களிடம் நியாயத்தைக் கேள்.'

சுவாமிகள் இந்த பாடல் மூலம் கண்ணனின் வாக்குச் சாதுர்யமும், தனக்குச் சாதகமாக தன் தாயை துணைக்கு அழைப்பதையும் கண்டு மகிழ்கிறோம்

மதுரகவி ஆழ்வார் ஆச்சாரிய பக்திக்கு இருப்பிடமாக இருந்தவர். ''கண்ணிநுன் சிறுதாம்பு என்று தொடங்கும் இவருடைய பாசுரங்எளில். தம் குருவான நம்மாழ்வாரைப் பாடி பரவுகின்றார்.

''கண்ணிநுண்சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெருமாயன் என் அப்பனில்
நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே ''

பல முடிச்சிகளையுடைய சிறிய குறுங் கயிற்றினால் யசோதை தன்னைக் கட்டும்படி செய்து கொண்ட ஆச்சரிய சக்தி படைத்த என் தந்தையான கண்ணனை விட்டு, தென் குருகூர்த் தலைவர் நம்மாழ்வாரைக் கிட்டி, அவர் நாமம் சொன்னால் என் நாவுக்கே மிக இனித்து அமுதம் ஊறும். மேலும்

''தேவு மற்று அறியேன், குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே
திருக்குருகூர் நம்பியாகிய நம்மாழ்வாரே யன்றி
வேறு தெய்வம் அறியேன் ''

அவர் பாடல்களை இனிய இசையுடன் எங்கும் பாடித்திரிவேன். என்றும், ஆழ்வாரை விட்டு மீளும்படி ஏற்பட்டால் தேவர்களுக்குத் தலைவனான திருமாலின் நீல நிற அழகு வடிவத்தைக் காண்பேன். ஏனெனில் வேறு எவர்க்கும் ஆட்படாமல் பெருமையும், கொடையும் உடைய ஆழ்வாருக்கு தான் அடிமை பட்டதால் பகவானை அடையும் பேறு பெற்றேன் என்றும் மற்றொரு பாடலில், தாயும் தந்தையுமாய் என்னை ஆளும் சடகோபரை, நான் குணம் நிறைந்த என் தலைவனாகக் கொண்டேன். காரிகாறன் புதல்வரான நம்மாழ்வார் என்னிடம் பேரன்பு காட்டி நான் கொண்ட பழைய கொடிய வினைகளை அழியும்படி செய்தார் ஆகையால் ஒண்தமிழ்ச் சடகோபன் கவிதைகளை எண் திசையும் அறிய இயம்புவேன் என்றெல்லாம் தம் ஆச்சாரியரான நம்மாழ்வாரைப் புகழ்கின்றார்.

ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகளும் ஆச்சாரிய பக்தியில் மிகச் சிறந்து விளங்குகிறார். இவருடைய முதல் பாடலே

''கு3ருத்4யாந் காரி மொந்நு தூ ஸத்
கு3ருத்4யான் காரி மொந்நு
கு3ருத்4யாந் காரி ஸ்ரீ ஹரி தெநோஸ் மெநி ஹட்வி
திருமந்தூர் த்வய சரம ஸ்லோகு நப்3பை3 ''

குருவை தியானம் செய் மனமே நீ ஸத் குருவை தியானம் செய். குருவே ஹரி என்று நினை. குருவானவர் உனக்கு, திருமந்த்ரம்,துவயம், சரம ஸ்லோகம் அருளுவார் என்கிறார் தம்முடைய ஸெளராஷ்ட்ர மற்றும் தமிழ் பாடல்களிலும், தம் ஆச்சாரியரின் பக்தியை வெளிபடுத்தும் முகமாக, தன் குருவின் நாமத்தை முத்திரையாக பதித்துள்ளார்

நாயகி சுவாமிகள் தம் மனதை நோக்கி கூறும் பாடலில்

''வடபத்ரார்யு சிந்தநாம் ரா:ரே
வைகுண்டு ஸேரே
கெட்டொ ஹிங்க3டொ3யி
நடனகோ3பால் க்ருப தொ2வி ''

வடபத்ராரியரின் சிந்தனையிலேயே இரு. நீ வைகுண்டத்தில் சேரலாம். நடனகோபால் கருணை வைத்து உன்னை பிறவிக் கடலிலிருந்து கரை ஏற்றுவார். வடபத்ராரியர் கூறும் வழியில் சென்றால் நடனகோபாலனுக்கு நாயகியாகலாம்.

''வடபத்ராரினுக் வாட் சலேத் ஜெலும் க2ண்ணா ர:வாய்
நடனகோ3பால் ஜன்தொ யேட் ''

குருவாகிய வடபத்ராரியர் காட்டிய வழி சென்றால் நடனகோபால் சத்தியமாக பிறவாநெறி அருள்வார். என்று கூறி தமது குரு பக்தியை வெளிபடுத்துகின்றார்.

''வடபத்ரார்யுநு மொகொ மோக்ஷிவாடு நமமூஸ்
மெனி வசிரி:யாஸ் திஸோஸ்
நடனகோ3பாலுக் க3வெஸ் ஸேவொ தி3யெஸ் அவி
நமம் தெ4ல்லி நிஜம் வசஸி ''

என் குரு வடபத்ராரியர் மோக்ஷத்திற்கு வழி திருமாலின் திருநாமங்களே என்று கூறினார். அவ்வாறே நடனகோபாலனின் நாமங்களைப் பாடினேன். பகவான் நேரில் வந்து சேவை சாதித்தான் இதனை நான் உண்மையாகவே எடுத்து கூறுகிறேன் என்கிறார்.மேலும்

''கு3ருப4க்தி கரேத் முக்தி பொந்து3வாய்
4க்தி சொக்கட் மி:டாய் ''

குரு பக்தி செய்தால் முக்தி அடையலாம். ஆகவே குரு பக்தியே சிறந்த மிட்டாய் என்று குருவின் மகிமையை எடுத்துக் கூறுகிறார்.

''கு3ரு ப4க்தி கரஸ்தெங்கோ ஸெய்
கோ3விந்த3 மோக்ஷி தே3ரெஸ்தெ '

குரு பக்தி செய்பவர்களுக்கு கோவிந்தன் மோக்ஷியைக் கொடுக்கிறான். என்று கூறி ஸத்குருவின் பக்தியையும், மகிமையையும் வெளியிடுகிறார்

பன்னிரு ஆழ்வார்களில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பெண்பாலர்.பூமா தேவியே, பரமனைப்பாடும் அடியவராகிய பெரியாழ்வாரைப் போல, பூ மாலையும் பா மாலையும் சூட்டி பரமனை துதிக்க ஆசைப்பட்டவர்.மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன் என்று முடிவு செய்து சர்வலோக நாயகனாகிய கண்ணனையல்லால் வேறெவரையும் உடலாலும், உள்ளத்தாலும் தொடுவது இல்லை என திட விரதம் பூண்டிருந்தவர். ஒரு காதலி, தன் காதலனைக் காணத் துடிக்கும் தன்மையை இவருடைய 'நாச்சியார் திருமொழியில்' காணலாம். கண்ணனை அடைய பாவை நோன்பு நோற்றாள்.. ஸ்ரீவில்லிபுத்தூரே திருவாய்ப் பாடியாகவும், வடபெருங்கோயில் நந்த பெருமானின் திரு மாளிகையாகவும்,வடபெருங் கோயிலுடைவனே கண்ணனாகவும், தன்னை கண்ணனை அடையத் துடிக்கும் கோபியையாகவும் பாவித்து பாவை நோன்பு நோற்றாள்.

நாச்சியார் திருமொழி ஒன்றில் தன் குறையைக் குயிலிடம் கூறி தன் காதலனாகிய கண்ணன் வரக் கூவுவாய் என்று பாடுகிறார்.

''என்பு உருகி இனவேல் நெடுங்கண்கள்
இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர்
தோணி பெறாது உழல்கின்றேன்,
அன்பு உடையாரைப் பிரிவு உறு நோயது
நீயும் அறிதி குயிலே !
பொன் புரை மேனிக் கருடக் கொடி உடைப்
புண்ணியனை வரக் கூவாய் ''

என் அன்புக்குரிய காதலனாகிய கண்ணனை எண்ணி எண்ணி என் எலும்புகள் உருகிவிட்டன. வேல் போன்ற நீண்ட என்னுடைய கண்கள் இமைகளோடு பொருந்தவில்லை. அதாவது உறங்கவே இல்லை. இவ்வாறு பலநாட்களாக துன்பக் கடலில் கிடந்து தவிக்கின்றேன். அக் கடலிலிருந்து கரையேற வேண்டுமானால், வைகுந்தநாதனெனும் தோணியைப் பெற்றால் தான் முடியும். ஆனால் அந்தத் தோணியைப் பெறமுடியாமல் சோர்ந்து கிடக்கின்றேன். குயிலே! உனக்கு நான் விபரமாக என் துன்பத்தை விவரித்துக் கூற வேண்டியதில்லை. அன்புடையவரைப் பிரிந்து வாழ்வ தனால் வரும் துன்பம் எத்தகையது என்று உனக்கே தெரியும். அதனால் என் துன்பத்தை நீக்குவதற்கு நீ உதவி புரிய வேண்டும். பொன் போன்ற நிறத்தையுடைய கருடனைக் கொடியிலே கொண்ட அந்த புண்ணியனைக் காணாமல் வருந்துகிறேன். அவன் என்னிடம் வருமாறு உன் இனிய குரலால் கூவுவாய். என்று வேண்டிக் கொள்கிறார். மேலும் தன் நிலையைக் கூறும்படி மேகத்தையும் தூதாக விடுக்கிறார்.

''சலங்கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள்! மாவலியை
நிலங் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழி வீர்காள்!
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலங் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே.

நீரை மொண்டு மேலெழும் குளிர்ந்த மேகங்களே! மஹாபலியிடத்தே சென்று யாசித்துப் பூமியைப் பெற்ற திரிவிக்கிரமன் எழுந்தருளி இருக்கும் திருவேங்கட மலையின் மீதேறிப் பரந்து மழை பொழிபவர்களே! உலங்கு என்னும் ஜாதி வகையைச் சேர்ந்த கொசுக்கள் புகுந்து உண்ட விளாம்பழம் ஒன்றுமில்லாமற் போவது போல் என்னுள்ளம் புகுந்து பிரிவு என்னும் வியாதி என் நலன்களை யெல்லாம் உண்டது. இத் துன்பத்தை அவனிடம் தெரிவியுங்கள் என்று வேண்டிக் கொள்கிறார்.

ஆண்டாள் நாச்சியார் இயல்பிலேயே பெண்ணாக இருந்தமையால், அவர் நாயகி உள்ளம் கொண்டு பாடல்கள் இயற்றியதில் வியப் பொன்றும் இல்லை. பராங்குச நாயகியாகிய நம்மாழ்வாரும் பரகால நாயகியாகிய திருமங்கை ஆழ்வாரும், திருமால்மேல் கொண்ட மையலாலே நினைவின் முதிர்ச்சியின் காரணமாக தம்மை அகத்தில் மட்டும் நாயகியாக விளங்கினர். ஆனால் நாயகி சுவாமிகளோ அகத்தில் மட்டுமேயல்லாமல் புறத் தோற்றத்திலும் நாயகியாகவே மாறினார்.சேலை உடுத்தி, ரவிக்கை அணிந்து, பொன்னாபரணங்களைப் பூண்டு, காலில் சலங்கை கட்டி முகத்தில் மஞ்சள் பூசி,கொண்டை போட்டு பூவணிந்து தம்மைப் பெண்ணாகவே மாற்றிக் கொண்டார்.

புருஷோத்தமனாகிய எம்பெருமானது பேராண்மைக்கு முன்னே உலகம் முழுவதும் பெண் தன்மையதாய் இருப்பதாலும், பெண்ணொருத்தி ஆண்மகனின் துணையால் தான் நிலைத்து நிற்க இயலுவதைப் போலவே ஜீவாத்மாவும் பகவானைச் சார்ந்து தான் நிற்க முடியும் என்ற உணர்வு மேலோங்கியதால் தான்

''ஜீவாத்ம கோடி யெல்லாம் ஸ்திரீ பிராயம் என்றறி வாய் '   என்று சுவாமிகள் கூறுகிறார். அதனாலேயே உருவத்தாலும் பெண்ணாகவே மாறினார்.

அகத்துறை மரபுப்படி தலைவன், தலைவி, தோழி, தாய் முதலியவர்களின் பெயர்கள் சுட்டப் படுவதில்லை. இம்முறைப்படியே ஆழ்வார்கள் பெயர் களைக் குறிப்பிடவில்லை. ஆனால் நாயகி சுவாமிகளின் பாடல்களில் தோழிகளுக்கு இந்துமுகி, சந்திரமுகி, வனிதா என்ற பெயர்கள் சுட்டப் படுகின்றன.

மேலும் ஆண்டாள் நாச்சியாரும், ஆழ்வார்களும் இறைவனிடத்து, குயில், கிளி, நாரை, நாகணவாய், கொக்கு, வண்டு, அன்னம், மேகம் போன்றவற்றை தூதாக அனுப்பி தம் உள்ளக் கிடக்கையை அறிவிக்கின்றனர். ஆனால் நாயகி சுவாமிகளின் பாடல்களில் தோழியை மட்டுமே தூதாக அனுப்பி தன் விரக தாபத்தை வெளிப் படுத்துகிறார். சுவாமிகளின் தமிழ் பாடல் களுள் பெரும்பான்மையானவை நாயகி பாவப் பாடல்களே யாகும்.

நாயகி சுவாமிகள் தன் தோழியிடம், பெண்களுக்குரிய நாணத்தை விட்டு விட்டு தன் விரக தாபத்தைக் கூறும் போது

'''மிஞ்சுதடி மோகமிங்கே மேகவண்ணன் மேலே
செஞ்சரணக் கமலஞ் சிரஞ்சேர்ப்பானோ நம் பாலே ''

என்று கூறுகிறார்.மேலும்

'''ஏகாந்தத்தில் மோக லீலை எண்ணின்றிச் செய்தானே!
இந்திங்கே கதிரவன் போலெரிக்கிறானே போடி''

என்றும்

''வந்தனம் செய்கின்றேன் மனம் வைத்தழைத்து வாடி
இந்திங்கே கதிரவன் போலெரிக்கிறானே போடி''

நாயகனைப் பிரிந்த நங்கை மாரிருக்கலாமோ
காயமதை விட்டு விட்டால் காணக் கிடைக்குமோ
கட்டி முத்தம் தந்த தங்கக் கட்டியடி போடி
அட்டி யொன்றும் சொல்லாமல் அழைத்து வரப் போடி
வாடி சகியே சற்றை மனம் வைத்து நீ போடி
வாடி நீ யெந்தன் மனம் கூடி மகிழப் போடி
பிழைக்க வழி வேறில்லைப் பிராணேசனையல்லால்
அழைக்க அவன் வருவானோடி அட்டி ஒன்றும் சொல்லான்
சொல்லடியே சொன்ன தெல்லாம் சுத்தமுடன் சொல்லாய்
கல்லடியே உன்தன் மனம் கண்ணன் முன் போய் நில்லாய் ''

என்று தூது விடுகின்றார். கண்ணனின் அடையாளத்தைத் தோழிக்குக்கூறும் போது

''அடையாளம் தோழி சொலக்கேள் அங்கையில் வேணும்
இடையர்க்குள்ள நடைகள் இருக்கமதைப் பேணும்
உச்சியிற் கோணக் கொண்டை ஒய்யார மதாயிருக்கும்
பட்சி வாகனமுடையோன் பாற் கடலுடையோன் ''

என்றெல்லாம் கூறுகிறார். நம்மாழ்வார், திருமங்கை யாழ்வார் முதலிய ஆழ்வார்களின் நாயகி பாவத்தோடு கூடிய பாடல்கள் நாயகி சுவாமி களின், நாயகி பாடல்களோடு பொருந்தியுள்ளன, மற்ற ஆழ்வார்கள் பாடல்களின் சாயல் சுவாமிகளின் பாடல்களில் காணப்படுகின்றன.

ஆகவே நாம் நாயகி சுவாமிகளின் அறிவுரைப்படி, அனவரதமும் பகவந் நாமங்களைப் பாடி, அவர் காட்டிய பக்தி நெறியில் சென்று, திருமாலின் திருவருளைப் பெற்று உய்வோமாக.

ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் பிருந்தாவனம்

ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் பிருந்தாவனம் மதுரை அழகர் கோயிலுக்குச் செல்லும் வழியில் கடச்சனேந்தலுக்கு அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் (காதக்கிணறு) நடனகோபால புரத்தில் அமைந்துள்ளது. இங்கு வந்து வணங்குகிறவர்கள் வேண்டும் வரங்களை யெல்லாம் நிறைவேற்றி வைக்கிறார் சுவாமிகள். இவரின் பிருந்தாவனம் சென்று அவரது அருளைப் பெறுவது நமது கடமைகளில் ஒன்றாகும்.


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube