கண்ணன் பார்த்தனுக்கு உபதேசித்தருளிய பகவத் கீதையின் தத்துவங்களை வாழ்கையில் கடைபிடித்து,
பகவத் கீதையின் விளக்கமாக வாழ்ந் தவர் ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள். அவர் மக்களுக்கு
ஞான, கர்ம, பக்தி, வைராக்ய மார்கங்களை தம் இனிய பாடல்களின் மூலம் மக்களுக்கு உபதேசித்தவர்.
சுவாமிகளுடைய புகழ் மற்றும் நாமாமிர்த்தப் பாடல்களை நாடெங்கும் பரப்ப சுவாமிகளின் பெயரால் ஓர்
அழகிய கலைக் கோயில் நிறுவ வேண்டுமென்ற எண்ணத்தை முதன் முதலில் தோற்றுவித்த பெருமை
'சொல்லின் செல்வி' ஸ்ரீமதி சிவானந்த விஜயலக்ஷ்மி அம்மையார் அவர்களைச் சாரும். என்று ஸ்ரீமந்
நடனகோபால நாயகி ஸ்வாமிகளின் ஸங்கீர்த்தனங்கள் மூன்றாம் பதிப்பு(1963) பதிப்புரையில்
கீதா நடன கோபால நாயகி மந்திர் நிர்வாகஸ்தர்களால் குறிப்பிடப் பட்டுள்ளது.
மதுரை மாரியம்மன் தெப்பகுளம் மேல வீதியில் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது கீதா
நடனகோபால நாயகி மந்திர். இது C.M.V. கிருஷ்ணமாச்சாரி அவர்களால் நிறுவப்பட்டது.
நாயகிசுவாமிகளின் சங்கீர்த்தனங்களை பாகவதோத்தமர்கள் வாயிலாக பக்தி சிரத்தையுடன் தொகுத்து
மூன்று பதிப்புகளை வெளியிட்டு நாயகி சுவாமிகளின் பெருமையை எங்கும் பரவச் செய்து பெருமை
அடைந்தவர் C.M.V கிருஷணமாச்சாரி அவர்கள். அவருக்கு அடுத்தபடியாகE.A.V. ரெங்காச்சாரி,
R.V.சுந்தர்ராவ் ஆகியோர் தலைவர்களாக இருந்து நாயகி சுவாமிகளின் புகழைப் பரப்பும் பணியில் ஈடுபட்டனர்.
25 ஆண்டுகளுக்கு மேலாக N.V.விஜயராகவன் என்பவர் செயலாளராக இருந்து பணிபுரிந்தார்.
அதன் பின் T.K.ஆத்மாராம் தலைவராகவும், D.G..கிருஷ்ணன், R.K. ராமகிருஷ்ணாரவ் ஆகியோர்
செயலாளர்களாகவும் பணி புரிந்தனர். தற்பொழுது D.G. கிருஷ்ணன் தலைவராகவும், T.K.ஆத்மாராம், K.K.
சுரேந்திரநாத் செயலாளர்களாகவும் இருந்து சுவாமிகளின் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
சுவாமிகளின் சங்கீர்த்தனை நூலை மந்திர் சார்பில் இரு முறை வெளியிடப் பட்டுள்ளது.
சுவாமிகளின் திருநட்சத்திரம் மிருகசீர்ஷத்தன்று பஜனை, சொற்பொழிவுகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன.
சுவாமிகளின் ஜெயந்தி விழாவை ஆண்டுதோறும் கச்சேரி,பட்டி மன்றம், மாதர்
கருத்தரங்கம்,சொற் பொழிவுகள் வைத்து மிகச் சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டு வருகிறார்கள்.
இந்நிறுவனம் அங்கத்தினர்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவினரால் நடத்தப்பட்டு
வருகிறது.
|