கைங்கர்யம் கிங்கர்யம் காம்ஸாஜா மெனஸ்தெனஸ்கி
கருமு ராணுமு ஸம்டி கெஷ்டம் பொந்தி3லேது ரா:ன்
கைங்கர்யமுஸ் கத்கொ கருமுராணு கடிலிஜாய் அத்தொ

     This section to reverend people and organization those worked hard to bringout the fame of Sri Natanagopala Nayagi swamigal and his keerthans to the world. Please select each section to browse through the contents.

ஸ்ரீ C.M.V. கிருஷ்ணமாச்சாரி

     ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகளின் அகத்துறை தமிழ் பாடல்கள் சுவாமிகளின் நாற்பத்தி நான்காவது வயதில் (சுவாமிகள் வாழ்ந்த காலத்தில்) சென்னையிலிருந்து 1887 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.சுவாமிகள் 1914ல் முக்தி அடைந்தார் ஆனால் ஸெளராஷ்ட்ர மொழிப் பாடல்களை பொருத்த மட்டில் அவர் தாம் பாடிய பாடல்களை எழுதி வைத்தாரா என்பதையும், நூல் வடிவில் வந்ததா என்பதையும் அறிய முடியவில்லை. ஆனால் அவரது சீடர்கள் பக்தர்கள் சுவாமிகளிடமிருந்து நேரடியாக பாடம் கேட்டு மனப் பாடம் செய்து பாடி வந்துள்ளார்கள். அப்பாடல்களில் உள்ள அறவுரை,அறிவுரை,பக்தி நெறி முதலிய பொருள் பொதிந்த பாடல்களைக்கேட்ட ஸ்ரீ C.M.V. கிருஷ்ணமாச்சாரி அவர்கள பல ஊர்களிலுள்ள பாகவதர்களை தம் திருமாளிகையில் அன்புடன் வரவழைத்து விருந்து உபசாரம் செய்து பாடல்களைப் பாடச் செய்து எழுத்து வடிவில் பதிவு செய்தார்.

அதனை கீதா அஷ்டவதானி ஸ்ரீ T.R.பத்மநாபய்யர், சுவாமிகளின் தமயனாரின் மகன் ஸ்ரீ C.R. ராமய்யர் போன்றோர் சரி பார்த்து பாட பேதங்களைக் கவனித்து சீரான பாடல் தொகுப்பை 1939லிலும்,1949லிலும் மற்றும் 1963லிலும் அவரே மீண்டும் மீண்டும் பதிப்பித்தார். அவர் சுவாமிகளின் புகழைபரப்ப வேண்டுமென்று தமது புகழ் பெற்ற வணிக நிறுவனமான சாரி & ராம் கம்பெனியில் சுவாமிகளின் படம் வெளியிட்டார்.

சுவாமிகளின் பிருந்தாவனக் கோயிலை அவர் தம் ஏராளமான சொந்த பொருட்களிலிருந்தும்,பக்தர்களிடமிருந்து வசூலித்தும் சிறப்பாக கட்டிமுடித்து 1941ல் கும்பாபிஷேகம் நடத்தினார். அவர் தாம் சம்பாதித்த செல்வத்தை நாயகி சுவாமிகளின் கைங்கர்யத்திற்கு செலவு செய்து அழியாப் புகழ் பெற்றார். மதுரை மாரியம்மன் தெப்பக்குள மேற்கு பக்கம் கீதா நடனகோபால நாயகி மந்திர் உருவாக மூலகர்த்தாவாக செயல் பட்டார்.


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube